உலகப்போரை ஆரம்பித்து வைத்தது அமெரிக்கா! வர்த்தகத்தில் நடக்கும் பெரிய மாற்றம்.. BRICS அமைப்பின் புதிய முயற்சி! கிரீன் சிக்னல் கொடுத்த ரஷ்யா.
SWIFT எனும் சர்வதேச பணப்பரிமாற்ற அமைப்பிற்கு மாற்றாக, BRICS நாடுகள் புதிய பணம் பரிமாற்ற தளத்தை உருவாக்கும்!

பிரிக்ஸ் நாடுகளிடையே சொந்த கரன்சியில் பண பரிவர்த்தனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்தியா-ரஷ்யா இடையே இந்த பரிவர்த்தனை தொடங்கும் என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் கூறியுள்ளார்.
கஜகஸ்தானின் அல்மாட்டி நகரத்தில் காமன்வெல்த் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் இந்த கருத்தை செர்கே கூறியிருக்கிறார்.
"இந்தியாவுடன் தேசிய கரன்சியில் வர்த்தகம் செய்ய முயன்று வருகிறோம். SWIFT எனும் சர்வதேச பணப்பரிமாற்ற அமைப்பிற்கு மாற்றாக, BRICS நாடுகள் புதிய பணம் பரிமாற்ற தளத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த முயற்சியில் பிரேசிலின் பரிந்துரைகள் மிக முக்கியமானதாக இருக்கின்றன" என்று கூறியிருக்கிறார்.
இவரது பேச்சை முழுமையாக புரிந்துக்கொள்ள வேண்டும் எனில் முதலில் SWIFT என்றால் என்ன? என்பது பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும். சர்வதேச அளவில் பண பரிமாற்றம் செய்வதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. 200க்கும் அதிகமான நாடுகள் 11,000க்கும் அதிகமான வங்கிகள் இதை பயன்படுத்துகின்றன. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு பணம் அனுப்ப இது பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் இதில் அமெரிக்க டாலர்தான் பயன்படுத்தப்படுகிறது.
இது மட்டுமல்லாது இது மேற்கு நாடுகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே, எப்போது வேண்டுமானலும் சீனா, ரஷயா போன்ற நாடுகள் இந்த அமைப்பிலிருந்து வெளியேற்றப்படலாம். எனவேதான் ரஷ்யாவும், சீனாவும் மாற்று பண பரிவர்த்தனை சிஸ்டத்தை பயன்படுத்துகின்றன. ரஷ்யா SPFS எனும் முறையையும், சீனா CIPS எனும் முறையையும் பயன்படுத்துகிறது.
இப்போது விஷயம் என்னெவெனில் பிரிக்ஸ் நாடுகளுக்கு உள்ளேயும் டாலரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இதை குறைக்க வேண்டும் என்று பிரிக்ஸ் நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. இந்தியாவை எடுத்துக்கொண்டால் ரஷ்யாவிடமிருந்து நாம் கச்சா எண்ணெய்யை வாங்குகிறோம். அதற்காக டாலரை கொடுக்கிறோம். இதை சொந்த கரன்சியில் மாற்ற பிரிக்ஸ் அமைப்புகள் முயன்று வருகின்றன. இப்படி நடந்தால் இந்தியா டாலரை நம்பியிருக்க வேண்டியதில்லை.
ரஷ்யா மட்டுமல்லாது பிரேசில், சீனா, தென்கொரியா என 10 நாடுகளுக்கு இடையே சொந்த கரன்சியில் பரிவர்த்தனை மேற்கொள்ள புதிய பரிவர்த்தனை அமைப்பு நிச்சயம் உதவும். டாலரை தவிர்ப்பதன் மூலம் நம்மால் பொருளாதாரத்தில் சொந்தமாக வளர முடியும். அதேபோல, நம்முடைய ரூபாயின் மதிப்பையும் உயர்த்த முடியும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த வகையல் ரஷ்யாவின் புதிய ஐடியா நமக்கு லாபமாக இருக்கும்.