ரணில் விக்கிரமசிங்க கைது விவகாரம்- விடுதலை செய்யுமாறு கோரிய எரிக் சொல்ஹெய்ம்!
நண்பனைத் தெரிகின்றதா?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நோர்வேயின் முன்னாள் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தனது உத்தியோகபூர்வ X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றின் மூலம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
2022ஆம் ஆண்டில் இலங்கை பொருளாதார மற்றும் அரசியல் பேரழிவை அடைந்தபோது அதைக் காப்பாற்ற எழுந்து நின்ற தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்றும், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும் சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஊழலுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் பிரச்சாரத்தை முழுமையாக ஆதரிக்க வேண்டும். ஆனால் உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் எரிக் சொல்ஹெய்ம் டெஹ்ரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தனது பதவி காலத்தில் அரச நிதியை தவறாக பயன்படுத்தியமைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் இறுதியில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.