மாநிலங்களவை உறுப்பினராக தமிழில் பதவியேற்றார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்!
திமுக தலைமையிலான கூட்டணியின் ஆதரவுடன், கமல்ஹாசன் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன்வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் தமிழில் மாநிலங்களவைஉறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டு, நாடாளுமன்றத்தில் தனது அரசியல் பயணத்தை தொடரவுள்ளார். அவருக்கு, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்துக்கள் தெரிவித்தார். அவருடன், திமுக உறுப்பினர்கள் வில்சன், சிவலிங்கம், சல்மா மற்றும் அதிமுகவின் இன்பதுரை, தனபால் ஆகியவர்களும் ராஜ்யசபா உறுப்பினர்களாக பதவியேற்றனர். பதவியேற்புக்கு முன்னதாகப் பேசிய கமல், "நான் பதவியேற்று என் பெயரைப் பதிவு செய்யப் போகிறேன். ஒரு இந்தியனாக, நான் என் கடமையைச் செய்வேன்" என்றார். ஜூன் மாதம் திமுக தலைமையிலான கூட்டணியின் ஆதரவுடன், கமல்ஹாசன் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன்வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் தமிழில் மாநிலங்களவைஉறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டு, நாடாளுமன்றத்தில் தனது அரசியல் பயணத்தை தொடரவுள்ளார். அவருக்கு, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்துக்கள் தெரிவித்தார். அவருடன், திமுக உறுப்பினர்கள் வில்சன், சிவலிங்கம், சல்மா மற்றும் அதிமுகவின் இன்பதுரை, தனபால் ஆகியவர்களும் ராஜ்யசபா உறுப்பினர்களாக பதவியேற்றனர். பதவியேற்புக்கு முன்னதாகப் பேசிய கமல், "நான் பதவியேற்று என் பெயரைப் பதிவு செய்யப் போகிறேன். ஒரு இந்தியனாக, நான் என் கடமையைச் செய்வேன்" என்றார். ஜூன் மாதம் திமுக தலைமையிலான கூட்டணியின் ஆதரவுடன், கமல்ஹாசன் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
லோக்சபா ஒத்திவைப்பு
இதே நேரத்தில், மக்களவை அமர்வு இன்று காலை 11 மணிக்கு தொடங்கியதும், பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை எச்சரித்தும், அமளி அடங்காததால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேநேரத்தில், INDIA கூட்டணியினர் பார்லிமென்ட் வளாகத்தில் பேரணி நடத்தினர். பீகார் வாக்காளர் பட்டியலில் திட்டமிட்ட சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக, ராகுல் காந்தி, பிரியங்கா காந்திஉள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரணியில் கலந்துகொண்டனர். இந்த மழைக்கால கூட்டத்தொடரில், பல முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், ஒவ்வொரு அமர்வும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளால் ஒத்திவைக்கப்படுகிறது.