Breaking News
நல்லூர் கந்தசுவாமியார் கோவிலின் மகோற்சவம் காலை (29) பகல் 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
,

வரலாற்று பெருமைமிகு நல்லூர் கந்தசுவாமியார் பெருங்கோவிலின் இவ்வாண்டு பெருமகோற்சவம் நாளை காலை (29) பகல் 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 27 தினங்கள் நடைபெறவுள்ளது.
இன்று (28) காலை நல்லூர் ஆலய கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை ஆலயத்தை வந்தடைந்தது.
கல்வியங்காடு நகரில் வசிக்கும் செங்குந்த பரம்பரை வழிவந்தோரால் ஆண்டுதோறும் நல்லைக் கந்தனுக்கான கொடிச்சீலை வேல்மடம் ஆலயத்தில் இருந்து சிறிய தேர் மூலம் எடுத்துவரப்பட்டு ஆலயத்தில் ஒப்படைப்பது பல தலமுறைகள் தவறாது சிறப்பாக நடைபெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மாலை, வருடாந்த திருவிழாவுக்கான பூர்வாங்க கிரியைகளுடன் வைரவர் சாந்தி விசேட பூஜைகளுடன் நடைபெற்று நல்லூர் திருவீதியில் வைரவர் எழுந்தருளினார்.