சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் தொடர்வதில் சிக்கல்!
ஜி ஜின்பிங் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகும் பட்சத்தில் அந்த பதவிக்கு 2 பேரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளன. ஜெனரல் ஜாங் யூக்ஸியா.தொழில்நுட்ப வல்லுநர் வாங் யாங்.

சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் (Xi Jinping) தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Jinping) அண்மைக்காலமாக பொது வெளிகளில் தோன்றுவதைத் தவிர்த்து வருகின்றார். சீனாவில் ஜனாதிபதியாக இருக்கும் நபர் பொதுவெளியில் தோன்றவில்லை என்றால் அதிகார மாற்றம் ஏற்படும் என்பது கடந்த கால வரலாறு.
இதனால் அவர் விரைவில் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது நடக்கும் பட்சத்தில் சீனாவின் புதிய ஜனாதிபதியாக யார் வருவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சீனாவில் ஒற்றை கட்சி ஆட்சி முறை உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சி தான் பிரதானமாக உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பவரே சீனாவின் ஜனாதிபதி ஆவார். மேலும் சீன ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். அந்தவகையில் சீன ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் 2012, 2018, 2023 என தொடர்ச்சியாக 3 தடவைகள் ஜனாதிபதியாக செயற்பட்டு வருகின்றார். அவரது பதவிக்காலம் 2028 ம் ஆண்டு வரை உள்ளது.
எவ்வாறு இருப்பினும் கடந்த மே மாதம் இறுதி முதல் 2 வாரம் வரை ஸி ஜின்பிங் திடீரென்று மாயமானார். இதனால் தற்போது சீனாவில் ஜி ஜின்பிங் ஜனாதிபதி பதவிக்கு முடிவுரை எழுதப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி ஒருவேளை ஜி ஜின்பிங் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகும் பட்சத்தில் அந்த பதவிக்கு 2 பேரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளன. அதில் முதல் இடத்தில் இருப்பவர் தான் மத்திய ராணுவ கமிஷன் துணை தலைவரான ஜெனரல் ஜாங் யூக்ஸியா. இவர் ஜி ஜின்பிங்கின் தீவிர ஆதரவாளராக இருந்தார். ஜி ஜின்பிங் முதல் முதலாக ஜனாதிபதியாக இவர் பெரும் பங்கு வகித்தார்.
இதனால் தான் ஜாங் யூக்ஸியாவிற்கு முக்கிய பொறுப்பை வழங்கினார். மேலும் ஜி ஜின்பிங் நாட்டில் இல்லாதபோது ஜாங் யூக்ஸியா கட்டுப்பாட்டில் தான் சீனா செயல்படும். தற்போதும் அவர் கட்டுப்பாட்டில் தான் சீனா இயங்கி வருவதாக கூறப்படுகிறது.
மறுபுறம் இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ளவர் தொழில்நுட்ப வல்லுநர் வாங் யாங். இவர் ஜி ஜின்பிங்கின் செல்லப்பிள்ளை என்று சொல்லப்படுகிறது. வாங் யாங்கை ஜனாதிபதி பதவியில் வைத்து கொண்டு மறைமுக ஜனாதிபதி செயல்பட ஜி ஜின்பிங் முடிவு செய்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான வேலைகளில் அவர் இறங்கி உள்ளதாகக் கூறப்படுகின்றமை குறிப்பித்தக்கது.
இந்நிலையில் சீன அரசியல் விவகாரம் தற்போது உலகளவில் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றமை குறிப்பிடத் தக்கது.