வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கரப்பந்தாட்டம்!
சாம்பியன்ஸ் ஆன யாழ் அணிகள்!

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கரப்பந்தாட்டம், சாம்பியன்ஸ் ஆன யாழ் அணிகள்!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 20 வயதுபிரிவில் புத்தூர் சோமஸ்கந்த கல்லூரி அணி ஆதிக்கம்.
கடந்த வியாழன் அன்று ஆவரங்கால் நடராஜ ராமலிங்க வித்தியாலயத்தில் ஆரம்பமான ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டி.
கவர்ச்சிகரமான போட்டிகளோடு கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்ற போட்டியிலே இறுதி நாளான இன்று இடம்பெற்ற இறுதிப்போட்டியிலே 16,18,20 ஆகிய மூன்று வயதுப்பிரிவிலும் யாழ் அணிகள் சாம்பியன்ஸ் ஆக தெரிவாகிய அதே வேளை ஏனைய அணிகளும் தமது அபார ஆட்டங்களை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
16 வயதுப்பிரிவிலே வலய மட்டத்தில் பலப்பரீட்சை நடாத்திய அதே இரு அணிகள் மாகாணத்திலும் பலப்பரீட்சை.. வலய மட்டத்தில் புத்தூர் சோமஸ்கந்த அணி சாம்பியன் ஆன போதும் இந்த தடவை ஆவரங்கால் நடராஜ ராமலிங்க வித்தியாலய அணி சாம்பியன் ஆனது
18 வயதுப்பிரிவில் எதிர்பாரா விதமாக வெளியேறிய பலம்மிக்க அணிகள்..
இறுதிப்போட்டியில் Mannar Olaiththoduvai RCTMS
அணியை எதிர்கொண்ட ஆவரங்கால் நடராஜ ராமலிங்க வித்தியாலயம் போராட்டத்தின் மத்தியில் சாம்பியன் ஆனது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 20 வயது பிரிவினருக்கான போட்டியிலே
மன்னார் சித்திவிநாயகர் அணியை எதிர்கொண்ட புத்தூர் சோமஸ்கந்த கல்லூரி அணி வெற்றிப்பெற்று சாம்பியன் ஆனது.
புத்தூர் சோமஸ்கந்த பாடசாலை அணிகள் வருடாவருடம் தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவாகும் அதே வேளை அண்மைக்காலங்களில் தேசியம் வரையில் சென்று சாதனைகளை நிலை நாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த பெருமை ஒவ்வொரு வீரர்,அவர்களை செதுக்கிய பயிற்றுவிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர் பாடசாலை சமூகத்தையும் சேரும்.
வழமை போல் இந்த வருடமும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பாடசாலை அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. அனைத்து பாடசாலை வீரர்கள், பயிற்றுவிப்பாளர்,அதிபர் ஆசிரியர் என அத்தனை பேருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.