இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவன மோசடியில் நல்லாட்சி அரசாங்கத்துக்கு தொடர்பாம்!
மகாபொல புலமைப்பரிசில் நிதியிலிருந்து SLIIT ஐ நீக்கி, அதை ஒரு வரையறுக்கப்பட்ட நிறுவனமாக மாற்றியதன் காரணமாக, நல்லாட்சி அரசாங்கத்தில் நிதி முறைகேடுகள் நடந்துள்ளது.

இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவன மோசடியில் நல்லாட்சி அரசாங்கத்துக்கு தொடர்பாம்!
இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (SLIIT) தொடர்பான முறைகேடுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் முறைப்பாடு அளிக்குமாறு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக் குழு (COPE) அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் , SLIIT இல் பதிவாகியுள்ள நிதி மோசடிக்கு நல்லாட்சி அரசாங்கமும் அதன் முழு அமைச்சரவையும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார்.
மகாபொல புலமைப்பரிசில் நிதியிலிருந்து SLIIT ஐ நீக்கி, அதை ஒரு வரையறுக்கப்பட்ட நிறுவனமாக மாற்றியதன் காரணமாக, நல்லாட்சி அரசாங்கத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாக அவர் தெளிவுபடுத்தினார்.
இந்த விடயத்தை ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் அடங்கிய அப்போதைய அரசாங்கமும் அமைச்சரவையும் விதிமுறைகளை மீறி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டத்தை கண்டறிந்துள்ளதாகவும் கூறினார்.
இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க சிஐடி மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் முறைப்பாடு அளிக்கப்படும்.
இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை மீண்டும் மஹாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.