நாவற்குழி சிவபூமி திருவாசக அரங்கத்தின் திறப்பு விழா நேற்றுத் திங்கட்கிழமை மாலை!
ஒவ்வொரு ஆலயங்களிலும் ஒவ்வொரு விதமான பிரச்சினை. கடவுளை விடவும் தாங்கள் பெரியவர்கள் என்ற எண்ணம்

நாவற்குழி சிவபூமி திருவாசக அரண்மனையில் அமைக்கப்பட்டுள்ள சிவபூமி திருவாசக அரங்கத்தின் திறப்பு விழா நேற்றுத் திங்கட்கிழமை மாலை (14) வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெற்றது.
இந்த அரங்கத்துக்கான அனுசரணை வழங்கிய அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் வை.மனோமோகன் சிவகௌரி தம்பதிகள் பிரதம விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், ஆன்மீக நிறுவனங்கள் சமூகப் பணியையும் செய்யலாம் என்பதற்கு முன்மாதிரியாக திகழந்தது தெல்லிப்பழை துர்க்காதேவி அம்மன் ஆலயமே. அதனைத் தொடக்கியவர் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள். அவரால் கண்டெடுக்கப்பட்ட முத்துத்தான் காலநிதி ஆறு.திருமுருகன்.
இன்று ஆலயங்களில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. தினமும் ஆலயப் பிரச்சினைக்காக என்னிடம் வருகின்றார்கள்.
ஒவ்வொரு ஆலயங்களிலும் ஒவ்வொரு விதமான பிரச்சினை. கடவுளை விடவும் தாங்கள் பெரியவர்கள் என்ற எண்ணம் மேலோங்குவதால்தான் இந்தப் பிரச்சினைகள் எழுகின்றன என நான் நினைக்கின்றேன். அவர்கள் ஆலய வழக்குகளுக்காக செலவு செய்யும் பணத்தை மக்கள் நலனுக்காக செலவு செய்தால் எவ்வளவோ நன்மைகள் கிடைக்கும்.
இந்து மதம் இன்று பிறசூழ்நிலைக் காரணிகளால் பல்வேறு அழுத்தங்களை எதிர்கொண்டு வருகின்றது. அதைத்தாண்டிச் செல்வதற்கு பெரும்பாடுபட வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
நல்லது செய்ய முனையும்போது இடர்கள் வரத்தான் செய்யும். அதையும் தாண்டித்தான் ஆறு.திருமுருகன் அவர்கள் பணி செய்கின்றார்கள். மக்களிடத்திலேயே நம்பிக்கையைப் பெற்றவர்கள் மிகக் குறைவு. ஆனால் ஆறு.திருமுருகன் வெளிப்படைத்தன்மையுடன் செயலாற்றுவதால்தான் அவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்து இந்தச் செயற்றிட்டங்களுக்கு உதவிகளை வழங்குகின்றார்கள்.
இப்போதைய காலத்தில் உதவி செய்வதற்கு மனம் வருவதே அரிது. ஆனால் மருத்துவ நிபுணர் வை.மனோமோகன் தம்பதியர் வழங்கி வருகின்ற உதவிகள் என்றும் போற்றுதலுக்குரியன, என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
சைவத்திரு நாட்டில் இந்து என்கிற மதஅரசியல் ஆதிக்கம் சிங்களம் போல் ஆக்கிரமித்து வருகின்றது! "ஈழம் எங்கள் பூமி தம்பி சாம் வளர்ந்த தேசம் தம்பி" என்ற பாடல் மனதில் ஒலிக்கின்றது.