உண்மைக்கு புறம்பான பொய்யான, ஆதாரமற்ற அவதூறுகளை பரப்பியதற்காக விந்தன் கனகரத்தினத்தின் மீது வழக்கு!
விந்தன் கனகரத்தினம் நீதிமன்ற அவமதிப்பு காரணமாக கடுமையான சட்ட சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்.

தேர்தல் காலத்தில் உண்மைக்கு புறம்பான பொய்யான, ஆதாரமற்ற அவதூறுகளை ஊடகங்கள் வாயிலாக தன் மீது பரப்பியதற்காக விந்தன் கனகரத்தினத்தின் மீது சுரேந்திரனால் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு இன்று நான்காவது தடவையாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
நீதிமன்ற அழைப்பாணைக்கு தலைமறைவாகி இருக்கும் விந்தன் கரகரத்தினம் பல முறைகள் அழைப்பாணை அனுப்பியும் அதை ஏற்றுக்கொள்ளாமல் ஒளித்து திரிகிறார் என தெரிகிறது.
இதன்படி நீதிமன்ற அவமதிப்பு காரணமாக கடுமையான சட்ட சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்.
மேலும் தான்தோன்றித்தனமாக வாய்க்கு வந்தபடி அவதூறுகளை பரப்பிய பொழுது, ஊடகவியலாளர்கள் "நீதிமன்றத்தில் இந்த விடயங்கள் விசாரிக்கப்பட்டால் உங்கள் நிலைப்பாடு என்ன" வென்று கேட்ட பொழுது நான் அதற்கு தயாராகவே உள்ளேன் என்று விந்தன் கரகரத்தினம் வீராப்பு பேசியது அனைவரும் அறிந்ததே.
இருப்பினும் ஆதாரங்கள் இல்லாமல் பொய் குற்றச் சாட்டுகளையும் அவதூறுகளையும் பரப்பியதனாலே இப்பொழுது நீதிமன்றத்தை முகம் கொடுக்க முடியாமல் ஒளித்து திரிவது தெரியவந்துள்ளது.
இது தொடருமாக இருந்தால் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டிற்கு மேலதிகமான சட்டச் சிக்கல்களுக்கு முகம் கொடுப்பதோடு தண்டனையும் பெற்றுக் கொள்ள வேண்டி வரும்.
அவதூறுகளையும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளையும் பரப்பு பவர்களுக்கு இது ஒரு நல்ல பாடமாக அமையும். மேலும் விந்தன் கரகரத்தினத்தினுடைய பேட்டியை ஒளிபரப்பிய, அதேபோன்று மீண்டும் அவரிடம் பேட்டியை பெற்று பரப்பிய ஊடகங்கள் மீதும் அடுத்த கட்டமாக சட்ட நடவடிக்கைகள் பாயும் என்று தெரிய வருகிறது.
அதற்கான ஏற்பாடுகளும், சிறப்பு சட்டத்தரணிகள் ஊடாக சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும் அறியக் கிடைக்கிறது.