பிரித்தானியா - தமிழர் கரப்பந்தாட்ட முதன்மைச் சுற்றுப்போட்டி! Kent Premier League 2025
50 இற்கு மேற்பட்ட வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏல நிகழ்வானது எதிர்வரும் 09/07/2025 புதன்கிழமை!

பிரித்தானியாவில் Kent Premier League 2025 தமிழர் கரப்பந்தாட்ட முதன்மைச் சுற்றுப்போட்டி.
KPL 2025 போட்டியானது இவ்வருடம் மூன்றாவது ஆண்டாக நடைபெறவுள்ளது.
இவ்வாண்டு பிரித்தானியாவில் பல ஆண்டுகளாக கழக ரீதியில் விளையாடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழ் கரப்பந்தாட்ட வீரர்களை
அதற்கென உருவாக்கியுள்ள புதிய பிரிமியர் லீக் அணிகளின் உரிமையாளர்கள், புள்ளி அடிப்படையிலான ஏலமுறை மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
KPL என்னும் Kent premier league போட்டிகள் எதிர்வரும் 31/08/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மூன்றாவது முறையாக தென்கிழக்கு இலண்டனில் உள்ள
Abbeywood என்னும் பகுதியிலுள்ள வெளியக மைதானத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. அத்துடன் இந்த KPL போட்டியின் சிறப்பம்சமாக வளர்ந்து வரும் புதிய கழகங்களிற்கான போட்டியும் நடைபெறவுள்ளது.
இந்த KPL போட்டிக்காக 8 பிரிமியர் லீக் அணிகளில் விளையாடுவதற்காக 50 இற்கு மேற்பட்ட வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏல நிகழ்வானது எதிர்வரும் 09/07/2025 புதன்கிழமை மாலை
Shooter’s Hill Sixth Form College கேட்போர்கூட மண்டபத்தில் நேரலை ஒளிபரப்புடன் நடைபெறவுள்ளது.
கடந்த இரு ஆண்டுகள் பல ஆயிரம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக நடைபெற்ற இந்த பிரிமியர் லீக் போட்டியானது இவ் ஆண்டும்
மூன்றாவது முறையாக KPL குழும நிர்வாகிகளான திரு.ரகு, திரு.கிரி, திரு.கிருஷ்ணா, திரு.சுபாஷ் மற்றும் திரு.சுரேஷ் ஆகியோரின் ஏற்பாட்டில் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.