கோடரிக் கம்பின் கொக்கரிப்பு!
இந்த நாட்டில் தற்பொழுது தேசிய பாதுகாப்புக்கு குந்தகமான நிலைமை காணப்படுகின்றது - சிறிலங்கா இராணுவ புலனாய்வாளர்கள்,

வெளிநாட்டில் இருந்து புலிகளை மீள் உருவாக்கம் செய்வதற்கு, முயற்சிக்கும் பலர் தற்போது இந்த நாட்டுக்குள் வந்தவண்ணம் உள்ளனர்.
இவர்களை விசாரணை வலையத்துக்குள் இந்த அரசாங்கம் உட்படுத்த வேண்டும்.
முன்னாள் விடுதலைப்புலிகள் பலர் இராணுவத்திடம் அகப்படாமலும் புனர்வழ்வுக்கு உட்படுத்தப்படாமலும் தப்பி சென்றும் உள்ளனர்.
அவ்வாறானவர்கள் இந்த நாட்டில் மீளவும் பயங்கரவாதத்தை உருவாக்க முயற்சி செய்வதாக தகவல்கள், ஆதாரங்களுடன் பிடிபட்ட நபர்கள் வழங்கிய வாக்கு மூலங்களின் அடிப்படையிலேயே இதனை நான் கூறுகின்றேன்.
ஆகவே இந்த நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் முளை விடுவதற்கு நாம் இடமளிக்க கூடாது. தற்போதைய இந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்தவித அக்கறையும் கொள்வதாக தெரியவில்லை.
இவ்வாறு தெரிவித்தார் சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கொழும்பு கிரிபத்கொட பகுதியில் கைது செய்யப்பட்ட நபர் வழங்கிய வாக்குமூலங்களுக்கு அமைய வவுனியா பகுதியில் இரண்டு வீடுகள் சோதனை செய்யப்பட்டு வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டு இருக்கும்பொழுது நாளை ஒரு சிலர் இவரைக் கூட அரசியல் கைதி எனக் கூறிக்கொண்டு வருவார்கள். இவ்வாறான பயங்கரவாதிகளை அரசியல்கைதி எனக் கூறும் வியாபாரம் காலம் காலமாக இடம் பெற்று வருகின்றது.
ஆயுதத்துடன் இருக்கும் போது அவர் போராளி. ஏனைய மக்களைக் கொன்ற அவர் இறந்தால் மாவீரன். அதே ஆயுதம் தாங்கிய பயங்கரவாதி நாட்டின் பாதுகாப்பு படையினால் கைது செய்யப்பட்டால் அவர் அரசியல் கைதி.
இந்த மாதிரித்தான் புலிப் பிரச்சாரம் அன்று தொட்டு இன்று வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நாட்டில் தற்பொழுது தேசிய பாதுகாப்புக்கு குந்தகமான நிலைமை காணப்படுகின்றது. அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.
செம்மணி புதைகுழியை ஐ.நா அதிகாரி பார்வையிட்டதில் ஆடிப்போன சிறிலங்கா இராணுவ புலனாய்வாளர்கள் ஆட்டுவித்த மணி, அணையா விளக்கினை அணைந்த விளக்கென ஆட்டிக்கொண்டும், நக்கிய நன்றிக்கு அவ்வப்போது அசிங்கமாக கக்கிக்கொண்டும் இருந்தவரால் அதிக தாக்கம் எற்படாத நிலையில், கொழும்பில் புலி என்று புதுப்படம் காட்டுகின்றனர். அவர் வைத்திருந்த ஆயுதம் T56 இது சிறீலங்கா இரணுவத்தினுடைது, அந்த நபர் பாதாளக் குழு அல்லது பலரை பாதாளத்திற்கு அனுப்பிய குழு அல்லது சிறீலங்காவை பாதாளத்திற்கு கொண்டு போகும் எந்தக் குழுவோ தெரியாது. ஆனால் சித்தாத் வசனம் வாசிக்கும் போது! கதை எழுதியது சிறீலங்கா புலனாய்வாளர்கள் என்பது புலனாகின்றது.