கரைநகர் போக்குவரத்து சபை பேருந்து சாரதிகள் பணிபுறக்கணிப்பு!
கரைநகர் போக்குவரத்து சபை சாலையின் பேருந்து நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோர் தனியார் பேருந்து சாரதி ஒருவரினால் தாக்கப்பட்டுள்ளார்.

கரைநகர் போக்குவரத்து சபை பேருந்து சாரதிகள் இன்றைய தினம்(19) பணிபுறக்கணிப்பில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
கரைநகர் போக்குவரத்து சபை சாலையின் பேருந்து நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோர் தனியார் பேருந்து சாரதி ஒருவரினால் தாக்கப்பட்ட சம்பவத்தில் தலையில் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சந்தேக நபரை கைது செய்யவில்லை என்றும் பாதிக்கப்பட்ட நபர்கள் தெரிவிக்கின்றனர்.
பாதுகாப்பு பிரச்சனையை காரணம் காட்டி தாம் பணி புறக்கணிப்பில் நாளைய தினம்(19) ஈடுபடப் போவதாக காரைநகர் போக்குவரத்து சபை சாலை பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்றைய தினம்(17) யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 6:00 மணிக்கு புறப்பட்ட 782 வழித்தட பேருந்தை மூளாய் சந்தியில் வழிமறித்த நபர் ஒருவர், பேருந்துக்குள் புகுந்து சாரதி மற்றும் நடத்தினரை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் சாரதிக்கு இரும்பு கம்பியால் தலையில் தாக்கிய நிலையில் அவர் முதலில் வலந்தலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் 24வது விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கதிரவேலு விஜயகுமார் வயது (47) என்ற சாதியும், எஸ் லிகிந்தன் வயது (33 )என்ற நடத்தினரும் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, சாரதி நடத்தினரை தாக்கிய குற்றவாளியை கைது செய்வதற்கு இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர் தற்பொழுது கிராமத்தில் இருந்து தலைமறைவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.