Breaking News
வாழ்க்கையின் சவால்களை சுமையாய் இன்றி சக்தியாய் கடக்கும் பெண்
.

பெண்மை ஒளியில் இரவுகள் கூட வழிவிட
சுய வருமானம் தேடி சக்கரங்கள் சுழல்கிறது..!
அழகிய யாழில் Uber Eats பை சுமந்தவளாய்
வாழ்க்கையின் சவால்களை சுமையாய் இன்றி சக்தியாய் கடக்கிறாள்
தந்தையின் கனவுக்கு, தாயின் நம்பிக்கைக்கு
தேர்ந்த எடுத்தாளும் உரிமை மங்கை– இவள் தான்..!
கொட்டும் மழை, வீசும் காற்று, வீதி மண்டலம்
எதுவாக இருந்தாலும் – தடையல்ல தூண்டுகோல் என பயணிக்கிறாள்..
நானும் என் வழியில் ஓர் இடமும் தருவேன்
பெண்கள் எல்லாம் மெளனமல்ல,
அவர்கள் வணிகமயமான வழிகளில், ஓர் புதிய வாக்கியம்!
உணவு எடுத்துச் செல்லும் இவள் –
ஒரு சமுதாய நம்பிக்கையை பரப்பி செல்கிறாள்...!