லண்டனில் சந்திரிக்காவும் இவரும் குடித்துவிட்டு அடித்த கூத்துகள் கொஞ்சமல்ல உலகபிரசித்தம்!
தனது கல்வி அறிவை தனது சொந்த இனத்திற்கு எதிராகவே, இல்லாத பொய்களை எல்லாம் கூறி, தனது நா வன்மையால், புலிகளை சர்வதேசத்தில் தடை செய்ய வைத்த கருங்காலி.
.png)
லக்ஷ்மன் கதிர்காமரும், இனம்தெரியாத "சினைப்பர்" தாக்குதலாளிகளும்.!
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரான திரு லக்ஷ்மன் கதிர்காமர், சினைப்பர் சூட்டினால் கொல்லப்பட்டார்.தாயகத்தில் மானிப்பாயைச் சேர்ந்த திரு லக்ஷ்மன் கதிர்காமர் ஒரு தமிழராவர். நன்கு கற்றுத் தேர்ந்த ஒரு கல்விமான். சட்ட நுணுக்கங்களையும் கரை கண்டவர். மிகுந்த ஆங்கில மொழிப்புலமை கொண்ட ஒரு நாவண்மையாளன். அறிவாளி அல்லது அறிவுஜீவி என்று எல்லோராலும் அறியப்பட்டவர்.
இலங்கைப் பல்கலைக் கழகத்தில் மட்டுமல்ல, இங்கிலாந்தின் புகழ் பெற்ற ஒக்ஸ்வோர்ட் பல்கலைக் கழகத்திலும் படித்துப் பட்டங்களைப் பெற்றவர். அவருடைய விவாதத் திறமையை "ஒக்ஸ்வோர்ட்" பல்கலைக்கழக பேராசிரியர்களும் அந்த நேரத்தில் வியந்து பாராட்டினார்கள் என்பதை சந்திரிக்கா நினைவு கூர்ந்துள்ளார்.
லக்ஷ்மன் கதிர்காமர் பணியாற்றிய சர்வதேச நிறுவனங்கள் பலவாகும். Internationa Labour Organisation (ILO) world Intellectural Property Organisation, (WIPO), SAARC போன்ற அமைப்புக்களில் அவர் ஆலோசகராகவும், இயக்குனராகவும், தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். வணிகம், முகாமைத்துவம், அறிவுசார் இயல்பு, தொழில்துறை, அரசியல் யாப்பு மற்றும் சர்வதேச சட்டவியல் போன்ற துறைகளையும் கற்றுத் தேர்ந்தார்.
இப்பேர்ப்பட்ட ஒரு மனிதரின் விசுவாசத்தையும், முழுத்திறமைகளையும், சேவைகளையும், முழுமையாகப் பெற்றுக் கொண்ட சிங்களப் பேரினவாதம், அன்று அவரது மரணத்தின் பின் இடி விழுந்தது போல, துக்கத்தில் ஆழ்ந்து போயிருந்தது.
தனது கல்வி அறிவை தனது சொந்த இனத்திற்கு எதிராகவே, இல்லாத பொய்களை எல்லாம் கூறி, தனது நா வன்மையால், புலிகளை சர்வதேசத்தில் தடை செய்ய வைத்த கருங்காலி.
கதிர்காமரின் ராஜதந்திர ஆளுமை காரணமாக, தனது அதிகாரத்தை பயன்படுத்தி லக்ஸ்மன் கதிர்காமரை வெளியுறவுத்துறை அமைச்சராக நியமித்தார்.தனது கல்வி அறிவை தனது சொந்த இனத்திற்கு எதிராகவே, இல்லாத பொய்களை எல்லாம் கூறி, தனது நா வன்மையால், புலிகளை சர்வதேசத்தில் தடை செய்ய வைத்த கருங்காலி. எமது போராட்டம் உலகநாடுகள் தடை செய்தமைக்கு இவரே பிரதான காரணம்.
இதனால் இந்த துரோகியைக் களை எடுக்க சிலர் ஆயத்தமாகினர். அதன் முதல் கட்டமாக இவன் பற்றிய தகவல் திரட்ட ஆரம்பித்தனர். அதற்கான சிறப்பு பயிற்சியும் அந்த தாக்குதலாளிக்கும் வழங்கப்பட்டு, இலக்கு நோக்கி நகர்த்தப் பட்டிருந்தார். அந்த நேரத்தில் ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்கவுக்கு அடுத்தபடியாக அதி உச்சப் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நபர் இவரே.
அமைச்சர் கதிர்காமருக்கு கொழும்பு - 7 இல் இரு வாசஸ்தலங்கள் இருந்தன. புல்லர்ஸ் லேனில் தனிப்பட்ட தங்ககமும், விஜயராம மாவத்தையில் உத்தியோகபூர்வ வாசஸ்தலமும் இருந்தது. புல்லர்ஸ் லேனிலுள்ள தனிப்பட்ட வாசஸ்தலத்திலேயே நீச்சல் தடாகம் உள்ளது. கதிர்காமரின் முக்கிய பொழுது போக்கு நீச்சல் அடிப்பதே. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கு வந்து விடுவார். இந்த தகவலே தாக்குதலுக்கான மூல காரணம்.
கதிர்காமர் இலக்கு வைக்கப் பட்டதும், அவரது நடமாட்டங்கள் "இலக்கு வைக்கப் பட்டவர்களால்" அவர்களது கண்காணிப்பு வலயத்துக்குள் கொண்டு வரப் பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு வந்தார். இலக்கை அழிப்பதற்கான இடமாக புல்லர்ஸ் லேனிலுள்ள தனிப்பட்ட வாசஸ்தலத்திலேயே தெரிவு செய்தனர். அதன் பின் தாக்குதலுக்கான இடத்தையும் தெரிவு செய்து வியூகம் அமைத்து கண்காணித்து வந்தனர்.
கதிர்காமரின் வீட்டுக்கு அருகில் இருந்த தொடர்மாடி குடியிருப்பில், இரண்டாவது மாடி ஒன்றில் வயோதிப தமிழ்த் தம்பதியர் இருவரே இருந்துள்ளனர். அவர்களுக்கு தெரியாது (இது அந்த தம்பதியர் விசாரணையின் போது சொன்னது) தான் தாக்குதலாளிகள் அந்த வீட்டில் தங்கி இருந்ததாக கைது செய்த பின் கூறினர்.
அவர்களது வீட்டினுள் நுழைந்த தாக்குதலாளிகள் குறித்த குளியலறைக்குள் இரும்புக் கம்பிகளைப் பொருத்தி சுமார் ஏழு அடி உயரத்திற்கு மேடையொன்று அமைத்து அதன் நடுவில், மெல்லிய இரு இரும்புக் கேடர்கள் அமைத்து, அதன் குறுக்கே ஒரு கேடரை பொருத்தி, அதில் ஒருவர் சைக்கிள் சீற்றில் இருப்பது போன்று வசதியாக இருக்கும் வகையில் சீற் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னால், ஜன்னல் கிறிலினூடாக சினைப்பரை வெளியே நீட்டி வைப்பதற்கு வசதியாக ஸ்ரான்ட் ஒன்றும் பொருத்தப்பட்டு அதில் சினைப்பர் துப்பாக்கியை பொருத்தி வைத்துள்ளனர். சுமார் 100-150m தூரத்திலேயே இலக்கு இருந்தது தாக்குதலாளிகளுக்கு இலகுவாகி விட்டிருந்தது.
இப்படியே தாக்குதலுக்கான நாளும் வந்தது. 12/08/2005 அன்று இரவு கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை, அமைச்சர் கதிர்காமரின் நூல்வெளியீடு நடைபெற்றது. நூலின் முதற் பிரதியை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் பெற்றார். இந்த விழா முடிவடைந்த பின்னர், விஜயராம மாவத்தையிலுள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்குப் புறப்பட்ட அவர், அதற்கு முன்னர் புல்லர்ஸ் லேன் வீட்டிலுள்ள நீச்சல் தடாகத்திற்கு நீச்சளுக்காக மனைவியுடன் சென்றார்.
இவர்கள் அங்கு புறப்பட்டதும் தாக்குதலாளிகளுக்கு இந்த தகவல் பரிமாறப்பட்டது. அங்கு அவர்கள் இவர்களுக்காக காத்திருந்தனர். அங்கு வந்து நீச்சலை முடித்துக்கொண்டு, விஜயராம மாவத்தை வீட்டிற்குச் செல்வதற்காக அமைச்சர் கதிர்காமர், மனைவியுடன் காரில் ஏறுவதற்காக நடந்து வந்துகொண்டிருந்போது சுமார் இரவு 11.00மணியளவில் அடுத்தடுத்து இரு குண்டுகள் கதிர்காமரின் தலையையும், மார்பையும் துளைத்தன. மிகத் துல்லியமான தாக்குதல். துரோகி சுருண்டு விழுந்தான்.
தன்னுடன் ஒன்றாக (அருகே) நடந்து வந்த கதிர்காமர் திடீரென பின்புறமாகச் சரிந்து வீழ்வதை உடன் வந்த மனைவி அவதானித்துள்ளார். எந்தவிதச் சத்தமும் கேட்காததால் மயக்கமடைந்து தான் அவர் வீழ்ந்ததாக நினைத்த மனைவி, ஓடிச்சென்று பார்த்தபோது தலையிலிருந்தும், மார்பிலிருந்தும் இரத்தம் பாய்வதை அவதானித்து அலறவே படையினர் விரைந்து வந்து தூக்கி அவரை உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதும் சில மணிநேரத்தில் அங்கு அவர் மரணமானார்.
அமைச்சர் கதிர்காமர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதைப் படையினர் உணர்ந்து கொண்டாலும் `சினைப்பர்' தாக்குதல் தான் அது என்பதை கண்டுபிடிக்க சில நிமிடநேரங்கள் அவர்களுக்கு பிடித்தது. அவரது பாதுகாப்பு அதிகாரிகளின் கவனம் அவரை காப்பாற்றுவதில் இருக்க, அந்த இடைவெளியை பயன்படுத்திய தாக்குதலாளிகள், அங்கிருந்து தப்பி செல்ல கிடைத்த அவகாசத்தை சரியாக பயன்படுத்தி தப்பி சென்றிருந்தனர்.
சினைப்பர் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் கதிர்காமருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டிருந்தபோது அங்கு தனது பாதுகாப்பைப் பற்றியும் கருதாது சென்ற ஜனாதிபதி சந்திரிகா கதிர்காமரின் உயிரைக் காப்பாற்றுமாறு அழுது கேட்டுக்கொண்டதாக பிரதி அமைச்சர் ஒருவர் அன்றைய நேரம் தெரிவித்தார். இது செய்தியாகவும் வெளிவந்திருந்தது.
அந்தளவு தூரம் இருவரது "நட்பும்" மிகவும் ஆழமானது. படிக்கும் காலத்திலேயே இருவரும் ஒன்றாக இருந்தனர். காலம் மாறி சந்திரிக்கா, குமாரதுங்காவை திருமணம் செய்து அவரது மரணத்தின் பின்பு, மீண்டும் லண்டன் சென்று சந்திரிக்கவும், கதிர்காமரும் குடித்து விட்டு அடித்த கூத்து கொஞ்சமல்ல. பின்னைய நாளில் அவர் மீது இருந்த மோகத்தில், தன் இனத்தையே பலியெடுத்த ஈனப்பிறவி தான் இந்த கதிர்காமர்.!
இன்று வரை தாக்குதலாளிகளை சிங்கள அரசால் கைது செய்ய முடியவில்லை, அது நடக்க போவதுமில்லை. சிங்கள அரசின் அதி உச்ச பாதுகாப்பை பெற்றிருந்த மிகப் பெரிய இலக்கொன்றை அவர்கள் குகையினுலேயே புகுந்து தாக்குதலாளிகள் அழித்திருந்தனர். வழமை போல சிங்கள தேசத்தின் மேல் இடி விழுந்தது போல சிங்களம் திகைத்து போனது. தாக்குதலாளிகளும் தமது இலக்கை வெற்றிகரமாக அழித்து விட்டிருந்தனர்.
ஆக்கம்:-துரோணர்.