நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா!ந
நல்லூர் கொடியிறக்கம்!

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (22.08.25) காலை நடைபெற்றது.
காலை வசந்த மண்டப பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வேல் பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையார், மற்றும் சண்டேஸ்வரர் ஆகியோர் ஆலய தீர்த்தக்கேணிக்கு எழுந்தருளியதை தொடர்ந்து தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
தீர்த்த திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை கொடியிறக்கம் நடைபெறவுள்ளது.
அத்தோடு நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்கள் நிறைவடைகின்றன.
நாளைய தினம் சனிக்கிழமை மாலை முருகப் பெருமானின் திருக்கல்யாணம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கொடியிறக்கம்!
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை (22.08.25) கொடியிறக்கத்துடன் நிறைவுக்கு வந்தது.
நல்லூர் ஆலய மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் மிக சிறப்பாக இடம்பெற்றது.
அந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை தீர்த்தோற்சவம் இடம்பெற்று, அதனை தொடர்ந்து மாலை 04.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று . கொடியிறக்கம் இடம்பெற்றது.
இன்றைய தினம் சனிக்கிழமை (23.08.25) மாலை நல்லூரானுக்கு திருக்கல்யாணமும் , நாளை ஞாயிற்றுக்கிழமை வைரவர் சாந்தி உற்சவமும் நடைபெறவுள்ளது.
அதேவேளை நல்லூர் மகோற்சவ காலத்திற்காக கடந்த 28ஆம் திகதி முதல் நல்லூர் ஆலய சூழலில் உள்ள வீதிகள் மூடப்பட்டிருந்த நிலையில் ,நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை வைரவர் சாந்தி உற்சவம் நிறைவடைந்ததும் , வீதிகள் திறந்து விடப்படவுள்ளது.