யாழ் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பண்மக்கள் இலவசக்கல்வி கூடத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா!
.

யாழ் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பண்மக்கள் இலவசக்கல்வி கூடத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா பண்மக்கள் இலவசக்கல்வி கூடத்தின் தலைவர் திரு .த.றஞ்சனின் தலைமையில் இடம்பெற்றது.
இதன் பொழுது விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கபட்டு பாராம்பரிய முறைப்படி வரவேற்பளிக்கபட்டனர்.தொடர்ந்து இலவசக்கல்வி கூடத்தின் கொடையாளர்கள் கௌரவிப்பும் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் இலவசக்கல்வி கூட மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது . தொடர்ந்து மாணவர்களின் சிந்து நடைகூத்தும் இடம்பெற்றது.
இதன் பொழுது பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் ,சிறப்பு விருந்தினராக சங்கானை பிரதேச செயலாளர் திருமதி கவிதா உதயகுமார்,கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரி பணிப்பாளர் ஆறுமுகம் நற்குணேஸ்வரன் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் , பண்மக்கள் இலவசக்கல்வி கூடத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள், புலம்பெயர் தேச உறவுகள் என பலரும் கலந்து கொண்டனர்.