மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் பிரச்சினைகள் பலவற்றுக்கு விரைவான தீர்வு .
சுற்றாடல் பிரச்சினைகள், பாதுகாப்பற்ற பிள்ளைகளுக்கான திட்டம் தயாரித்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக கவனம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான தீர்வு குறித்த தீர்மானங்கள் பலவற்றை மேற்கொள்ளும் நோக்கில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால நேற்று (13) மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதன் போது மாவட்டத்தில் காணப்படும் போதைப்பொருள் பாவனயை தடுத்தல், அலுவலக கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சுற்றாடல் பிரச்சினைகள், பாதுகாப்பற்ற பிள்ளைகளுக்கான திட்டம் தயாரித்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
விசேடமாக இங்கு காணப்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கான தட்டுப்பாடு தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன் அதன்படி புதிய போலீஸ் உத்தியோகத்தர்களை உள்வாங்கும் போது ஒரு வாரத்தினுள் 50 பொலிஸ் உத்தியோகத்தர்களை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் பிரதேசத்தில் அதிகரித்துள்ள சுற்றாடல் பிரச்சினை தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன் விசேடமாக இங்குள்ள சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் கொண்டு செல்லுதல் என்பவற்றை தடுப்பது தொடர்பாக ஆராயப்பட்டது.
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தினால் மண் அகழ்விற்காக சட்டரீதியாக சுரங்க அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கு காணப்படும் சந்தர்ப்பங்களில் அது தொடர்பாக பிரதேச சபைகள் மற்றும் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டதுடன் அனுமதி இன்றி மண் அகல்கள் மற்றும் கொண்டு செல்லுதல் தொடர்பாக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அவ்வாறே மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அகல்விற்காக இதுவரை காலமும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள அனுமதி பத்திரங்களின் பட்டியலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிற்கு பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அது தவிர மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் பாதுகாப்பற்ற பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காகn அவசியமான தீர்மானங்கள் சில எடுக்கப்பட்டதுடன் அங்கு பிள்ளைகளின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் போன்ற கல்வித்துறையில் போன்றன கல்வி போன்ற துறைகளில் அவதானம் செலுத்தும் அறிவியல் வேலைத்திட்டம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைையீட்டன் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.