கடலில் கவிழ்ந்த இரண்டு மீன்பிடி படகுகளில் காணாமல் போன மீனவர்களைத் தேடுவதற்காக பெல் 412 ஹெலிகாப்டர்.
தேவுந்தர மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகில் 5 மீனவர்கள் இருந்ததாக நம்பப்படுகிறது,

மாத்தறையில் உள்ள தெவுந்தர மீன்பிடித் துறைமுகம் மற்றும் களுத்துறையில் உள்ள பேருவளை மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த இரண்டு மீன்பிடிப் படகுகள் வேறு வேறு இடங்களில் கவிழ்ந்ததில் ஆறு மீனவர்களைக் காணமல் போயுள்ளதாக மீன்வளத் துறை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கடலில் கவிழ்ந்த இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்து காணாமல் போன மீனவர்களைத் தேடுவதற்காக பெல் 412 ஹெலிகாப்டரை விமானப்படைக்கு அனுப்புமாறு பாதுகாப்புச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
தெவுந்தர மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ஒரு மீன்பிடிப் படகும், மொரகல்ல பகுதியில் இருந்து புறப்பட்ட ஒரு மீன்பிடிப் படகும் இந்த விபத்தில் சிக்கியுள்ளன.
நேற்று (27) மாலை தேவுந்தர மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகில் 5 மீனவர்கள் இருந்ததாக நம்பப்படுகிறது, மேலும் படகு ஒரு வணிகக் கப்பலில் மோதிய பின்னர் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
விபத்தில் இருந்து ஒரு மீனவர் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார், மற்ற நான்கு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கடற்படைக்கு தகவல் அளித்த பின்னர், கடற்படை ஒரு தேடுதல் நடவடிக்கை கப்பலை அனுப்பியுள்ளது.
இதற்கிடையில், களுத்துறை மாவட்டத்தில் உள்ள பேருவளையின் மொரகல்ல பகுதியில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீன்பிடிப் படகில் இருந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்கள் அளுத்கம பகுதியைச் சேர்ந்த நந்துன் குமார மற்றும் அவரது சகோதரர் துமிந்த நந்துன் குமார என்றும், அவர்கள் தனுஷ மரைன் என்ற சிறிய மீன்பிடி படகில் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.