இலங்கையில் ஆரம்பமாகவுள்ள தமிழ் பண்பாட்டு அனைத்துலக மாநாட்டு!
,

இலங்கையில் ஆரம்பமாகவுள்ள தமிழ் பண்பாட்டு அனைத்துலக மாநாட்டு நிகழ்வில் கலந்து கொள்ளும் இந்திய பிரமுகர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
தமிழ் நாடு திருநெறிய சைவ சமய பாதுகாப்பு பேரவையின் தலைவர் கா.சசிகுமார் தலைமையில் சற்று முன்னர் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வந்தடைதனர்.
நாளை 30 ஆம் திகதி யாழிலும்,02 அம் திகதி நுவரெலியாவிலும்,எதிர்வரும் 6 ஆம் திகதி கொழும்பிலும் மேற்படி நிகழ்வுகள் நடை பெறவுள்ளது.
அதே வேளை இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பொருட்டு தமிழ் நாடு கவிமலர்கள் பைந்தமிழ் சங்க நிறுவுனர் மற்றும் தலைவர்,சந்திரகலா பதிப்பகம்,ஆதி டிரஸ்ட் உரிமையளார் கவிஞர் ரித்து சூரியா மற்றும்,பட்டின்ற பேச்சாளர்,எழுத்தாளர்,மனிதவள மேம்பாட்டு பயிற்றுவிப்பாளருமான தமிழ் செம்மல் கவிரிசி மகேசு ஆகியோரும் நேற்றைய தினம் மேற்படி நிகழ்வுகளில் கலந்து பொருட்டு இலங்கையினை வந்தடைந்துள்ளனர்.
இறுதி நாள் நிகழ்வு எதிர்வரும் 6 திகதி கொழும்பு மயுராபதி கேட்போர் மண்டபத்தில் இலங்கையின் முக்கிய அரச பிரதி நிதிகளின் பங்களிப்புடன் இடம் பெறவுள்ளதாகவும்,இதில் பலர் கௌரவிக்கப்படவுள்ளதாகவும் கா.சசிகுமார் மேலும் கூறினார்.