நைஜிரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்ததாக குற்றச்சாட்டு!
மத்திய மாநிலமான நைஜரில் உள்ள காஞ்சி நகரில் உள்ள இராணுவ தளத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணை!

ஆப்பிரிக்க நாடான நைஜிரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்ததாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நைஜிரிய பிரைஐகள் 44 பேருக்கு அந்த நாட்டு சிறப்பு நீதிமன்றம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது.
மேலும் 10 பேரின் விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய மாநிலமான நைஜரில் உள்ள காஞ்சி நகரில் உள்ள இராணுவ தளத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணையின் பின்னர் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நைஜீரியா 2017 முதல் பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களுக்காக பெருமளவிலான விசாரணைகளை அந்த நாட்டு இராணுவம் மேற்கொண்டு வருகின்றது .
மேலும் தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததாக 785 பேருக்கு எதிராக தண்டனைகளை வழங்கி உள்ளதாக தெரிவிக்கின்றது.
நைஜீரியாவில் போகோ காரம் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அண்மை காலமாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இவர்கள் கிராமங்களுக்குள் சென்று கால்நடைகளை திருடுவது பொருட்களை சூறையாடுவது, பணய கைதிகளாக மாணவர்களை கடத்திச் செல்வது போன்ற சம்பவங்கள் இடம்பெறுவது வழமை.