மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்திசெய்யும் வகையில் சபையின் செயற்பாடுகள் இருபது அவசியம் - வேலணை பிரதேச சபையின் தவிசாளர் அசோக் வவியுறுத்து!
மக்களால் மக்களின் நலன்களை முன்னெடுக்கவென்றே சபையின் உறுப்பினர்கள் இச்சபைக்கு வந்துள்ளனர்.

மக்களால் மக்களின் நலன்களை முன்னெடுக்கவென்றே சபையின் உறுப்பினர்கள் இச்சபைக்கு வந்துள்ளனர். அந்த மக்களின் எதிர்பார்ப்புக்களை முன்னெடுக்கும் வகையில் சபையின் செயற்பாடுகள் இருபது அவசியம் என வேலணைப் பிரதேச சபையின் தவிசாளர் வலியுறுத்தியுள்ளார்.
வேலணை பிரதேச சபையின் இரண்டாவது மாதாந்த கூட்டம் இன்று (16.07.2025) தவிசாளர் அசோக்குமார் தலைமையில் காலை 10.00 மணிக்கு சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது பிரதேசத்தின் கடந்தகாலத்தில் முன்னெடுத்து தொடரப்படவேண்டிய மற்றும் எதிர்காலத்தில் முன்னகர்த்தப்படவுள்ள பல்வேறு அவிருத்தி மற்றும் வேலைத் திட்டங்களின் முன்னொழிவுகள் குறித்து சபையில் பிரஸ்தாபிக்கப்பட்டு உறுப்பினர்களால் அவற்றின் ஏதுநிலைகள் குறித்து பரஸ்பரம் விவாதிக்கப்பட்டு சிலவற்றுக்கு தீர்வுகளும் எட்டப்பட்டன.
இந்நிலையில் தவிசாளர் தனது ஆரம்ப உரையில் - இந்தச் சபை மக்களால் மக்களின் நலன்களை முன்னெடுக்கவென்றே தெரிவுசெய்யப்பட்டது.
ஆனாலும் நிர்வாக கட்டமைப்பு அரச அதிகாரிகள் என்ற ஒரு கட்டமைப்புடனான இயந்திரமாகவே இருக்கின்றது.
இந்த இயந்திரமான அரச ஊழியர்களின் ஒத்துழைப்பு எமக்கு முழுமையாக கிடைத்தால் மட்டும்தான் அதன் இயங்கு நிலையை முழுமையாக இயக்கிக் கொண்டுசெல்ல முடியும் என நம்புகின்றேன்.
அந்தவகையில் அனைவரும் மக்களின் நலனில் அக்கறையுடன் பயணித்து மக்களின் எதிர்பார்ப்புகளையும் அபிலாசைகளையும் நிறைவுசெய்து கொடுப்பது அவசியம் என வலியுறுத்தியிருந்தார்.
மேலும் கட்டி முடிக்கப்பட வங்களாவடி கடைத்தொகுதியின் அடித்தள கடைகளின் வியாபார நடவடிக்கை ஒப்பந்தம் செய்து வெளி நபர்களுக்கு வழங்கப்பட்டாலும் அவை இன்னமும் நடைமுறைக்கு வராமை, வழங்கப்பட்ட முறைமையில் ஒழுங்கீனம், கடை தொகுதியின் மேற்றள கட்டுமாணம் தொடர்பில் உறுப்பினர்களால் கேள்வி பல்வேறு குற்றச்சாட்டுக்களும் கேள்விகளும் எழுப்பப்பட்டது.
கேள்விகளுக்கு பதிலளித்த தவிசாளர் சில கடைகளுக்கு நீதிமன்றில் வழக்கு இருப்பதாகவும் ஏனைய கடைகள் சட்டரீதியாக பகிரங்க கோரல் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுடிக்காட்டியதுடன், ஏதாவது பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பில் எழுத்துமூலம் சாட்சி ஆதாரங்களுடன் சமர்ப்பிக்குமாறும் அது உறுதிப்படுத்தப்படால் நடவடிக்கைக்கு விடப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் குடிநீர் விநியோகம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மக்களிடம் இருந்து வருவதாகவும் சுட்டிக்காட்டாட்டதுடன் பாதுகாப்பற்ற கிணறுகள்,
பற்றைக் காணிகளை சிரமதானம் செய்தல், சுகாதார மற்றும் சமூக சீரழிவுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறுப்பினர்களால் வலியுதுத்தப்படது.