பலதும் பத்தும். 16,072025 - காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்க கோரி கையொப்பம் சேகரிப்பு!
தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 203ஆகஉயர்வு.

யாழ். வட்டு இந்துக் கல்லூரி.
யாழ். வட்டு இந்துக் கல்லூரியின் ஊடகக் கழக ஏற்பாட்டில் நிஜமும் நிழலும் இதழ் வெளியீடும்கண்காட்சியும் இன்றைய தினம் கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக் கழக கலை பீடாதிபதி எஸ்.ரகுராம்கலந்துகொண்டார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் வ.ஸ்ரீபிரகாஸ் தலைமையிலான சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (14) இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் சாவகச்சேரி நகர சபையின் ஆளணி வெற்றிடங்கள் உள்ளிட்ட தேவைப்பாடுகள் தொடர்பில் கோரிக்கை மனுவொன்றை தவிசாளர் ஆளுநரிடம் கையளித்தார்.
முடியுமானவற்றை நிறைவேற்றித் தருவதாக ஆளுநர் இதன்போது பதிலளித்தார்.
வட மத்திய மாகாண சபையின் செயலாளராக இடமாற்றம்
சண்டிலிப்பாய் பிரதேச செயலாளராக கடமையாற்றி யாழ்ப்பாணத்திலிருந்து வட மத்திய மாகாண சபையின் செயலாளராக இடமாற்றம் பெற்று குறித்த சபையின் "முதல் தமிழ் பெண் செயலாளராக" சுபாஜினி மதியழகன் அவர்கள் கடமைகளை இன்று பொறுப்பேற்றுள்ளார்.
புஹாரி லண்டனில் 82 வயதில் காலமானார்.
நைஜீரிய முன்னாள் ஜனாதிபதி புஹாரி லண்டனில் 82 வயதில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள். நைஜீரியாவில் அவரது சொந்த ஊரில் இடம் பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
டொக்டர் மகேஷி விஜேரத்னவை பயணத் தடை
அதிக விலைக்கு மருத்துவ உபகரணங்களை விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் மகேஷி விஜேரத்னவை பயணத் தடை உள்ளிட்ட கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
நாட்டிற்குள் சுற்றுலா விசாவில் நுழைந்து தொழிலில் ஈடுபட்ட 10 வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியல்வுத் திணைக்கள அதிகாரிகளினால், கொழும்பு – 03 பகுதியில்அமைந்துள்ள மசாஜ் நிலையத்தில் நடாத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதுநேற்று மாலை இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 39 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆவர்.
குறித்த பெண்களில் ஆறு தாய் நாட்டினர், மூன்று வியட்நாமிய நாட்டினர் மற்றும் ஒரு சீன நாட்டவர்அடங்குவர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் மிரிஹான தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களைஉடனடியாக அந்தந்த நாடுகளுக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
குடும்பஸ்தர் ஒருவர் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
பிரான்சில் இருந்து வருகைதந்து மயிலிட்டியில் தங்கியிருந்த குடும்பஸ்தர் ஒருவர் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மயிலிட்டி வடக்கைச் சேர்ந்தசுப்பிரமணியம் ஜெயரஞ்சன் (வயது 54) என்பவராவார்.
மனைவி பிள்ளைகள் பிரான்சில் வசித்துவரும் நிலையில் மூன்று மாதத்திற்கு முன்னர் இலங்கைதிரும்பிய அவர் மயிலிட்டியில் தங்கியிருந்த போது படுக்கையில் உயிரிழந்த நிலையில் நேற்றுதிங்கள் கிழமை சடலமாக காணப்பட்டார்.
சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு யாழ். போதனாவைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளைமேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை பலாலிப் பொலிஸார்நெறிப்படுத்தினர்.
உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷ்யாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 50 நாட்கள் கெடு விதித்தார்.
ரஷ்யா போரை தொடர்ந்தால் அந்நாட்டின் மீது 100% கடுமையான பொருளாதார தடைகளைவிதிப்பேன் என ட்ரம்ப் எச்சரித்தார்.
இந்நிலையில் இந்தக் மிரட்டலுக்கு தங்கள் நாடு யாருடைய அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாதுஎன்று ரஷ்யா செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பதிலளித்தார்
டிமிட்ரி பெஸ்கோவ் மேலும் கூறுகையில், "அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறிய கருத்துக்கள்மிகவும் தீவிரமானவை. குறிப்பாக, சில கருத்துக்கள் நமது ஜனாதிபதி புடினை தனிப்பட்டமுறையில் குறிப்பிடுவதாக தெரிகிறது.
யாருடைய இறுதி எச்சரிக்கைகளையும் நாங்கள் பொருட்படுத்தவில்லை (We Dont care). வாஷிங்டனின் கருத்துக்களை பகுப்பாய்வு செய்ய நாங்கள் நேரம் ஒதுக்குவோம். ஜனாதிபதிபுடின் அவசியம் என்று கருதினால் நிச்சயமாக பதிலளிப்பார்" என்று தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்க கோரி கையொப்பம் சேகரிப்பு!
'சம உரிமைகளை வெல்வோம் இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்' எனும்தொனிப்பொருளில் சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்த எதிர்ப்பு பதாகையில் கையொப்பமிடும்நிகழ்வு இன்று (16) புதன்கிழமை காலை 10.30 மணி அளவில் மன்னார் பஜார் பகுதியில்இடம்பெற்றது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கு, இன்னொரு அடக்குமுறைச்சட்டங்கள் வேண்டாம், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக ரத்து செய், அனைத்து தேசியஇனங்களுக்கு சம உரிமைகளை உறுதி செய்யும் அரசியல் அமைப்பிற்காக போராடுவோம்உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து எதிர்ப்பு பதாகையில் கையொப்பம் சேகரிக்கப்பட்டது.
இதன்போது பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துகையொப்பத்தை பதிவு செய்தனர்.
தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 203ஆகஉயர்வு.
தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதலில் பலியானோர் எண்ணிக்கை 203ஆகஉயர்ந்துள்ளது.
தெற்கு சிரியாவில் சுவைடா மாகாணத்தில் ட்ரூஸ் மற்றும் பெடுவின் தரப்புக்கு இடையே மோதல்ஏற்பட்டது. இருதரப்பு மோதலை கட்டுப்படுத்த சிரியா அரசு ராணுவ துருப்புகளை அனுப்பிஉள்ளது. ட்ரூஸ் அமைப்பினர் மீது சிரிய ராணுவ அத்துமீறுவதாக இஸ்ரேல் ராணுவம்வான்வழித்தாக்குதலை நடத்தியது.