மலையகத்தில் தோட்ட தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பிலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
மடூல்சீமை பட்டவத்தை தோட்டத்தில் நான்கு பிரிவுகளைக் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பிலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

மடூல்சீமை, பட்டவத்தை,குருவி கொல்ல , மேமலை தம்ளபிளாஸ் ஆகிய தோட்ட புறங்களில் உள்ள தொழிலாளர்களே இவ்வாறு பணி பகிஷ்கரிப்பிலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
பட்டவத்தை தோட்டத்தில் உள்ள உழவு இயந்திரத்தின் டெய்லரை தோட்ட நிர்வாகிம் ஏல விற்பனைக்கு எடுத்து சென்றுள்ளதாகவும், குறித்த தோட்டத்தில் வாகன பற்றாக்குறை காணப்படுவதாகவும் , குறித்த தோட்டத்தில் வைத்தியசாலையில் உள்ள நோயாளர் காவு வண்டியையும் கடந்த காலங்களில் இவ்வாறு ஏல விற்பனை செய்துள்ளதாகவும், குறித்த காவு வண்டி கடந்த காலங்களில் பழுதடைந்திருந்த நிலையில் கூட்டுறவு சங்கத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பணத்திலேயே திருத்தப்பட்டதாகவும் இருப்பினும் தோட்ட நிர்வாகம் குறித்த காவு வண்டியை கடந்த காலங்களில் ஏல விற்பனை செய்துள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
குறித்த தோட்ட வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் இன்றி காணப்படுவதாகவும் குறித்த வைத்தியசாலையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் தோட்ட பகுதிகளில் தோட்டத்தில் உள்ள தேயிலை மலைகள் அனைத்தும் காடுகளாக காணப்படுவதாகவும் தேயிலை மலைகள் அனைத்தையும் துப்புரவு செய்து தருமாறு கோரியே நான்கு தோட்ட பிரிவுகளைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்திலும் பணி பகிஸ்கரிப்பிலும் ஈடுபட்டனர்.
இதன்போது பட்டவத்தை தோட்ட தொழிற்சாலைக்கு முன்பே கூடிய தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு முன்பே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் பேரணியாக தொழிற்சாலைக்குள்ளே சென்று தொழிற்சாலைக்குள்ளே அமைந்துள்ள தோட்ட அதிகாரியின் காரியாலயத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
குறித்த பேச்சுவார்த்தையில் லுணுகலை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ராஜேந்திரன் தர்ஷன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் தேசிய தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இருப்பினும் தோட்ட உயர் அதிகாரியுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தததோடு பின்னர் மடூல்சீமை பெருந்தோட்ட பதுளை மாவட்ட பிரதான அதிகாரியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்பட்டதோடு குறித்த பணிபகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக தோட்ட அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் குறித்த உழவு இயந்திரத்தில் டெய்லர் வீதியில் ஓடுவதற்கு உகந்தது இல்லை எனவும் இருப்பினும் ஏல விற்பனைக்கு குறித்த தோட்டத்தில் உள்ள வாகனங்கள் மாத்திரம் கொண்டு செல்ல படவில்லை எனவு மடுல்சீமை பகுதியில் உள்ள அனைத்து தோட்டங்களிலும் பாவிக்க முடியாமல் பழுதடைந்த வாகனங்கள் அனைத்து ஏல விற்பனைக்கு எல்டப் கிகிரிவத்தை தோட்டத்துக்கு
கொண்டு சொல்லப்பட்டுளதாக அவர் தெரிவித்தார் .