பிரித்தானியாவில் Kent Premier League 2025 ஏலம் எடுத்தல் நிகழ்வு!
31/08/2025 ஞாயிற்றுக்கிழமை, தென்கிழக்கு இலண்டனிலுள்ள Abbeywood பகுதியிலுள்ள Bostall Hill Playing Field வெளியக மைதானத்தில் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.

பிரித்தானியாவில் கடந்த இருவருடங்களுக்கு முன்னர் அறிமுகமாகி இருந்த இந்த முதன்மை லீக் போட்டியானது,
எதிர்வரும் 31/08/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று தென்கிழக்கு இலண்டனிலுள்ள Abbeywood பகுதியிலுள்ள Bostall Hill Playing Field வெளியக மைதானத்தில் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.
பிரித்தானியாவில் இயங்கிவரும் பெரும்பாலான கழகங்களின்கீழ் விளையாடிவரும் அனுபவமிக்க மற்றும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் இப்போட்டியில் பங்கெடுக்கின்றனர்.
இப்போட்டியின் மூலம் வீரர்கள் மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படுவதுடன் புதிய தன்னம்பிக்கை மற்றும் கழகங்களுக்கிடையில் நட்புறவு வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏலம் எடுக்கும் முறையும் அணிகளின் அறிமுகமும்
இந்த போட்டிக்கான முன்னேற்பாடாக இவ்வருடத்திற்குரிய போட்டிக்காக வீரர்களை ஏலமுறையில் எடுக்கும் - KPL ஏலம் 2025ஆனது - எதிர்வரும் 09/07/2025 புதன்கிழமை தென்கிழக்கு இலண்டன் மாநகரத்திலுள்ள
வூல்விச் (woolwich) என்னும் பகுதியிலுள்ள Shooters Hill Sixth Form College கேட்போர்கூட மண்டபத்தில் மாலை 6 மணிக்கு ஆரம்பமாகி, மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.
ஏலமுறை என்பது பணத்தினை கொண்டு வீரர்கள் தெரிவு செய்யப்படாமல், 8 KPLஅணிகளுக்கும் புள்ளிகள் வழங்கப்பட்டு, இப்புள்ளிகளை அடிப்படையாக கொண்டு,
ஒவ்வொரு அணிகளுக்குமான வீரர்களை KPL அணிகளின் உரிமையாளர்களும் முகாமையாளர்களும் பெற்றுக்கொள்ளவார்கள்.
இந்த நிகழ்வில் இப்போட்டிக்கென உருவாக்கப்பட்ட 8 பிரிமியர் லீக் அணிகளின் அறிமுகம், அந்தந்த அணிகளுக்கான உரிமையாளர்கள் மற்றும் அணி முகாமையாளர்கள் ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டு,
அதன் பின்னர் வீரர்கள் ஏலம் மூலம் தெரிவுசெய்யப்படவுள்ளனர். அத்தோடு, இந்நிகழ்விற்கு KPL போட்டியின் அனுசரனையாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
நேரலை ஒளிபரப்பு
இந்த ஏலமிடும் நிகழ்வினை விசேட தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு உலகின் எப்பாகத்திலிருந்தும் இணையவழி மூலமும் ஒளிபரப்ட ஏற்பாடாகியுள்ளது.
இதனை கரப்பந்தாட்ட வீரர்கள், ஆர்வலர்கள் மற்றும் நலன் விரும்பிகள் நேரடி ஒளிபரப்பின் மூலம் கண்டு களிக்கலாம் என்பதைனை மகிழ்ச்சியுடன் அறியத்தந்துள்ளார்கள் KPL குழுமத்தினர்.
இந்த இணைப்பினை தெடர்வதன் மூலம் இதனை கண்டுகளிக்கலாம்.
https://knvideo.live/event/TK9LIVE/TK9LIVE/embed.html -- https://www.facebook.com/share/16z74akuXu/
இந்நிகழ்வானது KPL-UKஇன் நிர்வாக குழும உறுப்பினர்கள் திரு. சுரேஷ், திரு. கிரி, திரு. றகு, திரு. சுபாஸ் மற்றும் திரு. கிருஷ்ணா
ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளது.
கடந்த வருட 2024க்கான ஏல நிகழ்வானதும் நேரடியாக ஒளிபரப்பாகி பல ஆயிரக்கானவர்களை மகிழ்விக்கச் செய்து பிரித்தானியாவிலும்
ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் பெரும் வரவேற்பைபெற்றதும் குறிப்பிடத்தக்கதென கென்ட் முதன்மை லீக் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.