எம் கண்களை குட்டிமணியின் கண்களாக கருதி தமிழ் ஈழம் காண்போம் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!
சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்ப் போராளிகளுக்கு அஞ்சலி - சர்வதேச சட்டத்திற்கு முரணாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்ப் போராளிகள் விடுவிக்கப்பட வேண்டும்!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 'கறுப்பு ஜூலை' தொடர்பான ஊடக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் எம் கண்களை குட்டிமணியின் கண்களாக கருதி தமிழ் ஈழம் காண்போம் என தெரிவித்துள்ளனர்.
நாற்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஈழத் தமிழர்கள் இலங்கை தீவில் தமிழ் இனப்படுகொலைக்கு உட்பட்டனர். இதில் 3000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர், 100,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர், மேலும் 5000க்கும் மேற்பட்ட தமிழ் வியாபாரங்கள் அழிக்கப்பட்டன. மறைந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இதை ஒரு இன அழிப்பு எனக் கூறினார். International Commission of Jurists (சர்வதேச நீதியாளர் ஆணையம்) இதைத் தெளிவாக ஒரு இன அழிப்பு எனக் கூறியது. ஆனால் இதுவரை ஒருவரும் நீதிக்கு முன் கொண்டு வரப்படவில்லை. இதற்குக் காரணம், இந்த இன அழிப்பு சிறிலங்கா அரசகட்டமைப்புகள் அனைத்தினாலும் நிகழ்த்தப்பட்டது என்பதே ஆகும்.
இந்த இன அழிப்பின்போது, 1983 ஜூலை 25 மற்றும் 27 ஆம் திகதிகளில், வெலிகடை சிறையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் சிறை அதிகாரிகளின் துணையுடன் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலையில் TELO இயக்கத் தலைவர்கள் செல்வராஜா “குட்டிமணி” யோகசந்திரன், கணேஷனன் ஜெகநாதன் மற்றும் “காந்தியம்” அமைப்பின் தலைவர் டாக்டர் ராஜசுந்தரம் ஆகியோர் கொல்லப்பட்டனர். குட்டிமணி மற்றும் ஜெகநாதன் இருவரும் தங்களின் கண்கள் தமிழ் ஈழம் பிறக்கும் நாளில் காணக்கூடிய தமிழருக்கு தானமாக வழங்கப்பட வேண்டும் என விரும்பினர். குட்டிமணியின் வார்த்தைகளில், “என் கண்களை கண்ணில்லாத நபருக்கு தானமாக அளிக்க வேண்டும், தமிழ் ஈழம் எனது கண்களால் காணப்பட வேண்டும்” என்றார். சிறைச்சாலை படுகொலையில் இருவரும் முதலில் முழங்காலில் நிறுத்தி , இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தி கண்கள் பிடுங்கப்பட்டன, கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். மேலும், ஒரு சிங்களக்கைதி குட்டிமணியின் நாக்கை வெட்டிச் சிவந்த அவரது இரத்தத்தை குடித்துவிட்டு, “நான் புலியின் இரத்தத்தை குடித்துவிட்டேன்” எனப் பெருமை அடித்தார். மேற்கு கல்வி பெற்ற அமைச்சரான மறைந்த அதுலத்முதலி இதை “சிங்கள அசுரர்களின் இரத்தவெறி ஆசையை அடக்கிய ஒரு பலியீடு” என விவரித்தார். இதற்கும் இதுவரை நீதியின் முன் ஒருவரும் நிறுத்தப்படவில்லை
சிறில்ங்கா அரசு இன்று வரை சிங்களை சிறையை தமிழ் அடக்குமுறைக்கு ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. போர் முடிந்து 16 ஆண்டுகள் ஆகியும், தமிழ் போர்க்கைதிகள்(POWs) இன்னும் சிங்கள சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். சிலர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அடைத்துவைக்கப்பட்டுள்ளன்ர். 2002ஆம் ஆண்டு சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் கையெழுத்திடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில், சிறிலங்காப்பிரதேசமும். தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதேசமும் தெளிவாக வரையறுக்கப்ப்ட்டுள்ளமை, போரும் அதில் ஈடுபட்டவர்கள் குறித்த நடவடிக்கைகள் யாவும் உள்நாட்டு சட்டங்களால் அல்ல மாறாக
சர்வதேச சட்டங்களின்படி நடத்தப்பட வேண்டுமென எடுத்தியம்புகிறது. 3வது ஜெனீவா ஒப்பந்தத்தின் 118ஆவது ஷரத்து போர்நிறைவுக்குப் பின்னர் போர்க்கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால், சிறிலங்கா தொடர்ச்சியாக சர்வதேச சட்டங்களை மீறிக் கொண்டே இருக்கிறது.
சிறிலங்காத் தீவில் அமைதியை உருவாக்குவதற்கு 3 வது ஜெனீவா ஒப்பந்தத்திற்கு முரணாக தடுத்து வைக்கப்பட்டுள்ள போர்க்கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். கறுப்பு யூலை நினைவு நாளையொட்டி, சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை முன்னெடுத்த அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் நோர்வே, தமிழ்ப் போர்க்கைதிகளை விடிவிக்கும் முயற்சியில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோருகிறது.
இவ் விடயம் தொடர்பாக “குரலற்றவர்களின் குரல்”, தாயக மனித உரிமை அமைப்பின் முயற்சிகளையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆதரிக்கிறது. சிங்கள சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் வீரர்களையும், மக்களையும் நினைவுகூரும் சிறந்த வழி, இன்றும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் போர்க்கைதிகளை விடுவிப்பதற்கும், எங்கள் கண்களை குட்டிமணியின் கண்களாக கருதி தமிழ் ஈழத்தைப் காண்பதற்கும் எங்களை அர்ப்பணிப்பதே ஆகும்.
தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்