"சிறுபான்மை இனம்" என்ற பதத்திற்குப் பதிலாக "சகோதர இனம்" என்ற பதம் அறிமுகம்!
ஏமாற்று வித்தையின் இன்னொரு வடிவம்!

கண்டி மாவட்ட சர்வமத அமைப்பும், தேசிய சமாதான பேரவையும் இணைந்து "சிறுபான்மை இனம்" என்ற பதத்திற்குப் பதிலாக "சகோதர இனம்" என்ற பதத்ததைப்பிரயோகிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
மேற்படி வேலைத்திட்டத்தைப் பிரபல்யப்படுத்தும் வகையில் பரவலாக ஸ்டிகர்களையும் சுவரொட்டிகளையும் ஒட்டும் வேலைத்திட்டம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளது.
கண்டி மாவட்ட சர்வமத அமைப்பின் ஏற்பாட்டாளர் காமினி ஜயவீர இது பற்றித் தெரிவிக்கையில்,
நாம் நீண்டகாலமாக இன ஒற்றுமைக்காகப் பாடுபட்டு வருகிறோம். அதில் ஒரு அங்கமாக ‘சிறுபான்மை இனம்’ என்ற பதற்குப் பதிலாக ‘சகோதர இனம்’ என்ற சொல்லைப் பாவிப்பது தொடர்பாக நீண்டகாலமாக முயற்சி செய்து வருகிறோம். இதற்காக, தேசிய சமாதான பேரலை எமக்கு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. தேசிய மட்டத்தில் இதணை நாம் முன் எடுக்க உள்ளோம்.
எமது மாதாந்த அமர்வு மற்றும் பல்வேறு வகையான செயலமர்வுகளில் நாம் சகோதர இனம் என்ற சொல்லையே பயன் படுத்துகிறோம். பெரும் பான்மை, அல்லது சிறுபான்மை என்ற பதங்களைப் பயன் படுத்தும் போது ஒரு இனத்தை உயர்த்துவது போன்ற மன நிலையும் மற்றும் ஒரு இனத்தை தாழ்த்துவது போன்ற மன நிலையும் ஏற்படுகிறது.
அதே நேரம் சகோதர இனம் என்று கூறும் போது சகோதர உணர்வு ஏற்படுகிறது. எனவே அத்தகைய சொற்பிரயோகத்தை பிரபல்யப்படுத்தும் பல நிகழ்வுகளை ஒழுங்கு செய்து வருகிறோம். அதில் ஒன்றாகவே மேற்படி ஸ்டிகர் போராட்டமும் அமைந்துள்ளது என்றார்.