Breaking News
யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் இயக்கப்படவேண்டும்!
.

மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் இயக்கப்படவேண்டும் என வலியுறுத்திய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், அடுத்த மாத இறுதியிலிருந்து அதனை இயக்குவதாக வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டமைக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.
பொருளாதார மத்திய நிலையத்தை மீளச் செயற்படுத்துவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (12) நடைபெற்றது.
யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபனின் வரவேற்புரையைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஆளுநர், யாழ். மாவட்டத்தில் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு நிலையான விலை கிடைப்பதில்லை என்பதைக் கருதிலெடுத்தே இந்தப் பொருளாதார மத்திய நிலையம் உருவாக்கப்பட்டது.