சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டம்!
,

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் இன்று (26) திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில், சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தும் நோக்கில், வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களை தழுவிய வகையில் ஒரே நேரத்தில் பாரிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு நேர்ந்த வன்முறைகள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு நீதி கிடைப்பதற்காக, எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானங்களை வலுப்படுத்தும் நோக்கில் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
உள்நாட்டு பொறிமுறைகள் பயனளிக்காததால், சர்வதேச நீதிப் பொறிமுறைகள் மூலம் மட்டுமே நீதி கிடைக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.