சுவாமி விபுலானந்தர் அவர்களின் துறவற நூற்றாண்டு விழா.
.

சுவாமி விபுலானந்தர் அவர்களின் துறவற நூற்றாண்டு விழா.
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் துறவற பூண்ட நூற்றாண்டு விழாவும், அவருடைய 78 ஆவது மகா சமாதி தின நிகழ்வுகளும் நேற்றையதினம் (19) சனிக்கிழமை மானிப்பாயில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தில் வழிபாடுகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் இருந்து கலை கலாசார பேரணி மானிப்பாய் இந்துக் கல்லூரி வரை ஊர்வலமாக நடைபெற்றது. பின்னர் மானிப்பாய் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நினைவு நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக சபாநாயகர் கெளரவ ஜகத் விக்ரமரத்ன அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்திய கலாநிதி கெளரவ சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, கெளரவ ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திரு. ய. அனிருத்தனன், மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், மானிப்பாய் இந்துக் கல்லூரி சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சுவாமி விபுலானந்தரின் துறவற வாழ்க்கையும், தமிழ் மொழி, இலக்கியம், இசை, கல்வி உள்ளிட்ட துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்பும் நினைவு கூரப்பட்டன.
இந்நிகழ்வானது புத்தசாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழ் மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம் பிரதேச செயலகம், அகில இலங்கை இந்துமா மன்றம் மற்றும் யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம் ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.