பாரிஸில் மிதிவண்டி சேவை: கட் டண உயர்வு !
பாரிஸில் மிதிவண்டி சேவை: கட் டண உயர்வு ஆகஸ்ட் 12 ஆம் திக தி முதல் பாரிஸில் உள்ள வெலிப்’ (Velib’) மிதிவண்டி சேவைக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. பெரும்பாலான சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரித்துள்ளது, இதனால் பயனர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். புதிய கட்டண விவரங்கள்: V-Libre சேவை: முன்பு இலவசமாக இருந்த இந்தச் சேவைக்கு, இனி பதிவுக்கட்டணமாக 6 யூரோ செலுத்த வேண்டும். இதற்கு ஈடாக, பயனர்களுக்கு 90 நிமிடங்களுக்கான இலவசப் பயண நேரம் வழங்கப்படும். ஒரு சாதாரண மிதிவண்டி பயன்படுத்த, 30 நிமிடங்களுக்கு 1 யூரோ கட்டணம். ஒரு மின்சார மிதிவண்டியை பயன்படுத்த, முதல் 45 நிமிடங்களுக்கு 3 யூரோ மற்றும் அதற்குப் பிறகு ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் 2 யூரோ கட்டணம். V-Plus சேவை: இந்தச் சேவைக்கான மாதாந்திரக் கட்டணம் 3.10 யூரோவிலிருந்து 4.30 யூரோவாக உயர்ந்துள்ளது, இது கிட்டத்தட்ட 40% அதிகரிப்பு. இந்தத் திட்டத்தில் ஒரு சாதாரண மிதிவண்டியை 30 நிமிடங்கள்வரை இலவசமாகப் பயன்படுத்தலாம். மின்சார மிதிவண்டி யைப்பயன்படுத்த, முதல் 45 நிமிடங்களுக்கு 2 யூரோ மற்றும் அதற்குப் பிறகு ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் 2 யூரோ கட்டணம். V-Max சேவை: இந்தச் சேவைக்கான மாதாந்திரக் கட்டணம் மட்டும் மாறாமல் 9.30 யூரோவாக உள்ளது. இந்தத் திட்டத்தில் ஒரு சாதாரண மிதிவண்டியை முதல் ஒரு மணி நேரம்வரை இலவசமாகப் பயன்படுத்தலாம். மின்சார மிதிவண்டியை பயன்படுத்த, முன்பு இலவசமாக இருந்த இரண்டு தினசரி பயணங்களுக்கு, இனி 0.50 யூரோ கட்டணம் வசூலிக்கப்படும் (45 நிமிடங்களுக்கு உட்பட்டு). சிறப்புக் கட்டணங்கள்: வயதானவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, முதல் இரண்டு பயணங்களுக்கான கட்டணம் 50 சென்ஸிலிருந்து 37 சென்ஸ் ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. பயனர்களின் கருத்துகள்: இந்த விலை உயர்வுகுறித்து வெலிப்' பயனர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். பலர் சேவையின் தரம் குறையும் நிலையில், கட்டணத்தை உயர்த்துவதைக் கண்டித்துள்ளனர். பாரிஸ் மாணவர் அமைப்பு (Union Étudiante Paris) இந்த விலை உயர்வுக்கு எதிராக ஒரு மனுவைச் சமர்பிப்பதற்கு கையொப்பம் சேகரிக்கும் வேலையைத் தொடங்கியுள்ளது.

பாரிஸில் மிதிவண்டி சேவை: கட் டண உயர்வு
ஆகஸ்ட் 12 ஆம் திக தி முதல் பாரிஸில் உள்ள வெலிப்’ (Velib’) மிதிவண்டி சேவைக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. பெரும்பாலான சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரித்துள்ளது, இதனால் பயனர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
புதிய கட்டண விவரங்கள்:
V-Libre சேவை: முன்பு இலவசமாக இருந்த இந்தச் சேவைக்கு, இனி பதிவுக்கட்டணமாக 6 யூரோ செலுத்த வேண்டும். இதற்கு ஈடாக, பயனர்களுக்கு 90 நிமிடங்களுக்கான இலவசப் பயண நேரம் வழங்கப்படும். ஒரு சாதாரண மிதிவண்டி பயன்படுத்த, 30 நிமிடங்களுக்கு 1 யூரோ கட்டணம். ஒரு மின்சார மிதிவண்டியை பயன்படுத்த, முதல் 45 நிமிடங்களுக்கு 3 யூரோ மற்றும் அதற்குப் பிறகு ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் 2 யூரோ கட்டணம்.
V-Plus சேவை: இந்தச் சேவைக்கான மாதாந்திரக் கட்டணம் 3.10 யூரோவிலிருந்து 4.30 யூரோவாக உயர்ந்துள்ளது, இது கிட்டத்தட்ட 40% அதிகரிப்பு. இந்தத் திட்டத்தில் ஒரு சாதாரண மிதிவண்டியை 30 நிமிடங்கள்வரை இலவசமாகப் பயன்படுத்தலாம். மின்சார மிதிவண்டி யைப்பயன்படுத்த, முதல் 45 நிமிடங்களுக்கு 2 யூரோ மற்றும் அதற்குப் பிறகு ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் 2 யூரோ கட்டணம்.
V-Max சேவை: இந்தச் சேவைக்கான மாதாந்திரக் கட்டணம் மட்டும் மாறாமல் 9.30 யூரோவாக உள்ளது. இந்தத் திட்டத்தில் ஒரு சாதாரண மிதிவண்டியை முதல் ஒரு மணி நேரம்வரை இலவசமாகப் பயன்படுத்தலாம். மின்சார மிதிவண்டியை பயன்படுத்த, முன்பு இலவசமாக இருந்த இரண்டு தினசரி பயணங்களுக்கு, இனி 0.50 யூரோ கட்டணம் வசூலிக்கப்படும் (45 நிமிடங்களுக்கு உட்பட்டு).
சிறப்புக் கட்டணங்கள்: வயதானவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, முதல் இரண்டு பயணங்களுக்கான கட்டணம் 50 சென்ஸிலிருந்து 37 சென்ஸ் ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
பயனர்களின் கருத்துகள்:
இந்த விலை உயர்வுகுறித்து வெலிப்' பயனர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். பலர் சேவையின் தரம் குறையும் நிலையில், கட்டணத்தை உயர்த்துவதைக் கண்டித்துள்ளனர். பாரிஸ் மாணவர் அமைப்பு (Union Étudiante Paris) இந்த விலை உயர்வுக்கு எதிராக ஒரு மனுவைச் சமர்பிப்பதற்கு கையொப்பம் சேகரிக்கும் வேலையைத் தொடங்கியுள்ளது.