பிரான்சில் 2025 பள்ளி சேர்க்கை: கட்டாயத் தடுப்பூசிகள் என்னென்ன?
குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு, கட்டாயமாகச் செலுத்தப்பட வேண்டிய தடுப்பூசிகள்குறித்து விபரங்கள்.

2025 பள்ளி சேர்க்கை: கட்டாயத் தடுப்பூசிகள் என்னென்ன?
பிரான்சில் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உங்கள் குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு, கட்டாயமாகச் செலுத்தப்பட வேண்டிய தடுப்பூசிகள்குறித்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
கட்டாயத் தடுப்பூசிகள் என்பது, ஒவ்வொரு குழந்தையையும், அத்துடன் ஒட்டுமொத்த சமூகத்தையும் கடுமையான நோய்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டது. பள்ளிகள் மற்றும் குழந்தைப் பராமரிப்பு மையங்களில் நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுக்கவும், சமூகத்தில் ஒரு வலுவான நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கவும் இது உதவுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான கட்டாயத் தடுப்பூசிகள்
2018-க்கு முன்பு பிறந்த குழந்தைகளுக்கு:
• diphtérie
• tétanos
• poliomyélite
• Haemophilus influenzae B
• coqueluche
• Hépatite B
• rougeole
• les oreillons
• la rubéole
• méningocoque B
• méningocoques ACWY
• pneumocoque
ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டிருக்க வேண்டும்
உங்கள் குழந்தையின் தடுப்பூசி நிலையை எப்படி நிரூபிப்பது?
உங்கள் குழந்தையைப் பள்ளி அல்லது குழந்தைப் பராமரிப்பு மையத்தில் சேர்ப்பதற்கு, அவர்களுடைய சுகாதார அட்டை (carnet de santé) அல்லது மருத்துவரால் வழங்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். மருத்துவ காரணங்களால் உங்கள் குழந்தைக்குத் தடுப்பூசி செலுத்த முடியவில்லை என்றால், அதற்கான மருத்துவச் சான்றிதழை வழங்க வேண்டும்.
தடுப்பூசி சான்றிதழ் இல்லாதபட்சத்தில், பள்ளியில் சேர்க்கை மறுக்கப்படலாம். எனவே, பள்ளி தொடங்குவதற்கு முன் உங்கள் குழந்தையின் தடுப்பூசி நிலையை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.
குறிப்பு: குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் பிரான்சில் இலவசமாக வழங்கப்படுகின்றன. காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அதற்கான செலவுகள் அரசாங்கத்தால் ஏற்கப்படும்.