Breaking News
பிரெஞ்சு மழலையர் கல்வி: ஒரு அன்பான அணைப்பு,அன்பான கூடு.
மழலையர் பள்ளி என்பது ஒரு குழந்தையின் முதல் சமூகப் பயணம்.

பிரெஞ்சு மழலையர் கல்வி: ஒரு அன்பான அணைப்பு
பிரான்சில் உள்ள மழலையர் பள்ளி, வெறும் கல்வி நிலையம் மட்டுமல்ல; அது குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான, அன்பான கூடு. 3 வயதில், குழந்தைகள் தங்கள் பெற்றோரின் அரவணைப்பிலிருந்து முதன்முறையாக வெளியே வருகிறார்கள். அப்போது அவர்கள் எதிர்கொள்ளும் உலகத்தை அன்போடும், பொறுமையோடும் பிரெஞ்சு கல்வி முறை எதிர்கொள்கிறது.
மழலையர் பள்ளியில், எழுத்துக்களையும் எண்களையும் மனப்பாடம் செய்வதை விட, விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வண்ணக் களிமண்ணில் சிற்பம் செய்வது, இசைக்கு ஏற்ப நடனமாடுவது, அல்லது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு கட்டடத்தைக் கட்டுவது போன்ற செயல்பாடுகள்மூலம், குழந்தைகள் தங்களுக்குள் இருக்கும் படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறார்கள். இது ஒரு விளையாட்டாகத் தோன்றினாலும், ஒவ்வொரு செயலும் அவர்களின் எதிர்காலத்திற்கான ஒரு அடிக்கல்.
இந்த மழலையர் பள்ளி என்பது ஒரு குழந்தையின் முதல் சமூகப் பயணம். இங்கேதான் அவர்கள் தங்கள் ஈகோவை மறந்து, மற்ற குழந்தைகளுடன் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளக் கற்றுக்கொள்கிறார்கள். அழுவது, சிரிப்பது, சண்டையிடுவது, சமாதானம் செய்வது என ஒவ்வொரு உணர்வையும் வெளிப்படுத்தி, சமூக உறவுகளை எப்படி அமைப்பது என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். இந்த உறவுகள், அவர்களின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நட்புகளுக்கு அடித்தளமாக அமைகின்றன.
பிரெஞ்சு மழலையர் பள்ளியில், ஆசிரியர்கள் குழந்தைகளின் கற்பனைக்கு ஒருபோதும் தடை போடுவதில்லை. ஒரு குழந்தை தானாகவே ஒரு கதையை உருவாக்கலாம், ஒரு படத்தை வரையலாம் அல்லது ஒரு புதுமையான விளையாட்டைக் கண்டறியலாம். இந்தக் கற்பனை ஆற்றல், அவர்களின் மனதில் ஒரு அழகான உலகத்தை உருவாக்குகிறது. அவர்கள் பயம் இல்லாமல் தங்கள் கனவுகளை வளர்த்துக்கொள்ள இது உதவுகிறது.
இந்தக் கல்வி முறை ஒரு குழந்தையின் குடும்பப் பின்னணியைப் பார்ப்பதில்லை. ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும், அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான அன்பு, கவனம் மற்றும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதனால், ஒவ்வொரு குழந்தையும் தன்னம்பிக்கையுடன் வளர்கிறார்கள்.
மழலையர் கல்வி என்பது வெறும் ஒரு படிப்பு மட்டுமல்ல, அது ஒரு குழந்தையின் வாழ்க்கையில் ஒரு இனிமையான, பாதுகாப்பான தொடக்கம். பிரெஞ்சு மழலையர் பள்ளிகள் ஒவ்வொரு குழந்தையின் உள்ளத்தையும் திறக்கின்றன, அவர்களை மகிழ்ச்சியான மற்றும் பொறுப்பான மனிதர்களாக வளர்க்கின்றன. இது பிரான்ஸ் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு அழகான உணர்வுபூர்வமான பயணமாகும்.
பிரான்சில் 3 வயது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு மழலையர் பள்ளி கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டது. இந்த வயது வரம்பில் உள்ள குழந்தைகள் பள்ளியில் சேர்ந்திருக்க வேண்டும்.
பல்வேறு வயதுப் பிரிவுகள்: மழலையர் பள்ளிகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
Petite Section (PS): 3 வயது குழந்தைகள்.
Moyenne Section (MS): 4 வயது குழந்தைகள்.
Grande Section (GS): 5 வயது குழந்தைகள்.
சில பள்ளிகளில் Très Petite Section (TPS) என்ற ஒரு பிரிவும் உள்ளது, இது 2 வயது குழந்தைகளுக்காக வழங்கப்படுகிறது.

சிவா சின்னப்பொடி