இணையத்தில் வைரலான நீர்யானை குட்டி; பார்வையாளர்கள் செய்த செயலால் எழுந்த சர்ச்சை
.
தாய்லாந்து நாட்டில் உயிரியல் பூங்கா ஒன்றில் பிறந்துள்ள நீர்யானைக் குட்டியொன்று இணைத்தில் வைரலாகி உள்ளது.
தாய்லாந்தின் பட்டாயாவிற்கு அருகிலுள்ள காவ் காவ் உயிரியல் பூங்காவில் நீண்ட வரிசையில் நின்று இரண்டு மாத பெண் பிக்மி நீர்யானைiய அனைவரும் பார்வையிடுவதோடு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து வைரலாக்கி வருகின்றனர்.
மேலும், எந்நேரமும் குதித்து உற்சாகமாய் விளையாடுவதால் அதற்கு “குதிக்கும் குட்டி”( மூ டெங்) என்றும் பெயரிட்டுள்ளனர்.
இந்த குட்டி பிறந்ததில் இருந்து அங்கு வர்ம பார்வையாளர்களின் எண்ணிக்கையும் சடுமதியாக அதிகரித்துள்ளதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு காரணம், அங்கு இதற்கு முன் வந்து பார்வையிட்டு சென்றவர்கள் எடுத்த காணொளிகள் புகைப்படங்களை பார்த்து ஆசைகொண்டு இந்து புதிதாக பிறந்த நீர்யானை குட்டியை பார்வையிட வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், மூ டெங்கைப் பார்க்க வருபவர்கள் அதனிடம் தவறாக நடத்துவதைக் காட்டும் வீடியோக்கள் வெளிவந்ததை அடுத்து, மிருகக்காட்சிசாலையின் இயக்குநர் நரோங்விட் சொட்சோய் (Narongwit Chodchoi),மக்கள் மூ டெங்கைப் பார்க்க வரும்போது முறைகேடற்ற விதத்தில் நடந்துகொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார்.
இந்த நடத்தைகள் சாதாரணமானவை அல்ல. மிகவும் ஆபத்தானவை எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும், இந்த குட்டி மூ டெங்கை பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. அவற்றிற்கான பாதுகாப்பு நிறைந்த மற்றும் பொருத்தமான சுற்றுச்சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய தேவையும் எமக்கு உண்டு எனவும் அவர் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளிகளில் சில விடயங்களை அவதானிக்க கூடியதாக இருந்தது. அதிலும் குறிப்பாக, மட்டிமீன் என அழைக்கப்படும் shellfish வகை மீன்களையும் பார்வையாளர்கள் குட்டிக்கு கொடுப்பதை அவதாினிக்க கூடியதாக இருந்தது.
மேலும், தேவையற்ற பொருட்களை குட்டியின் மீத வீசுவதால், அதற்கு உறங்குவதற்கு கூட பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதையும் அவதானித்ததாக அவர் குறிப்பிட்டார்.