Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ரஷ்ய – உக்ரைன் போரில் இலங்கை இராணுவவீரர்கள் கூலிப்படை!

67 மற்றும் 50 வயதுடைய இருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உக்ரைன் – ரஷ்ய போரில் இலங்கை கூலிப்படையினர்; மேலும் இருவர் கைது.

ரஷ்ய – உக்ரைன் போரில் இலங்கை இராணுவத்தின் ஓய்வு பெற்ற வீரர்களை கூலிப்படையாக அனுப்பி ஆள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் மேஜர் ஜெனரல் ஒருவரும் அவருக்கு ஆதரவாக இருந்த முன்னாள் சார்ஜென்ட் மேஜர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் பகுதியைச் சேர்ந்த 67 மற்றும் 50 வயதுடைய இருவரே நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, 55 இலங்கையர்களைக் கொண்ட குழுவை உக்ரைனின் மோதல் பிரதேசங்களுக்கு அழைத்துச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கடவட பிரதேசத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த இரண்டு சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.