பலதும் பத்தும் : கனேடிய தூதுவருக்கும் இலங்கை தமிழரசு கட்சி இளம் உறுப்பினர்களுக்குமிடையே சந்திப்பு!
,

கனேடிய தூதுவருக்கும் இலங்கை தமிழரசு கட்சி இளம் உறுப்பினர்களுக்குமிடையே சந்திப்பு! :
இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக்வோல்ஸ் அவர்களுக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் இளம் அரசியல்உறுப்பினர்களுக்குமிடையேயான சந்திப்பு ஒன்று நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதன்போது நடைமுறை அரசியல் விடயங்கள் குறித்தும், விசேடமாக தமிழ் மக்கள் தற்போது எதிர்கொள்கின்ற பிரச்சினைகள்சம்பந்தமாகவும், தற்போது கனடா அரசினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும், வடக்கு கிழக்கில்இன்னும் பல அபிவிருத்தி திட்டங்களை, எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற விடயங்கள் இந்த சந்திப்பின் போதுகலந்துரையாடப்பட்டது. அத்துடன் தற்போதைய அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களால் தமிழ் மக்கள் எவ்வாறான சவால்களைஎதிர்கொள்கின்றார்கள் போன்ற விடயங்களும் ஆராயப்பட்டன. இது தவிர, எதிர்வருகின்ற உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது,
இலங்கைக்கு 90 கோடி அமெரிக்க டொலர்களை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி! :
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த ஆண்டு 90 கோடி அமெரிக்கடொலர்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2024 ஆம் ஆண்டில், இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த போது, அதிலிருந்து மீட்கும்நோக்கில் 80 கோடியே 80 லட்சம் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியிருந்தது. இந்த ஆண்டு வழங்கப்படும் நிதி குறிப்பாக விவசாயம், மின்சாரம், சுற்றுலா, திறன் மேம்பாடு மற்றும் பேரின பொருளாதாரஸ்திரத்தன்மை போன்ற துறைகளுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடியில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம், :
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று (16) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஆரம்பமாகியுள்ளது. களுவாஞ்சிகுடியில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இந்த மத்தியகுழு கூட்டம்நடைபெற்றுவருகின்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றுவருகின்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், இரா.சாணக்கியன்,ஞா.சிறிநேசன்,இ.சிறிநாத்உட்பட மத்தியகுழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர். இதன்போது உயிரிழந்த தமிழரதசுக்கட்சி உறுப்பினர்களுக்குஅஞ்சலி செலுத்திய பின்னர் பதில் தலைவர் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது.
தனியார் காணிகளுக்குள் இராணுவத்தினர் செய்யும் அதிர்ச்சிச் சம்பவங்கள்! -பிரதமரிடம் ஆதாரத்துடன் முறையிட்ட வலிவடக்கு மக்கள், :
யாழ்ப்பாணத்துக்கு வியஜம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் வலிவடக்கு மக்கள் முக்கியமான பிரச்சனைகள்அடங்கிய மகஜர்களினை கையளித்துள்ளனர். குறித்த மகஜரில் மக்களின் காணிகளுக்குள் இராணுவத்தினர் மேற்கொள்ளும்அதிர்ச்சி நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமாக அறிவித்துள்ளதாக அவர்கள் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளனர்.
இலங்கையில் 16 இலட்சம் அங்கவீனர்கள் அடையாளம், :
நாட்டில் 16 இலட்சம் அங்கவீனர்கள் காணப்படுவதாகவும் அவர்களில் 9 இலட்சம் பேர் பார்வைக் குறைபாடு கொண்டவர்கள்என அகில இலங்கை பார்வைக் குறைபாடுடையவர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசன்ன விக்கிரம சிங்க தெரிவித்தார். கண்டியிலுள்ள மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தில் ஆளுநருடன் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றது. மேற்படி சந்திப்பின் போது மத்திய மாகாணத்திலுள்ள பார்வைக் குறைபாடு கொண்டவர்களது பிரச்சினைகள் பற்றி இங்குகலந்துரையாடப்பட்டது. மேற்படி கலந்துரையாடலின் போது மத்திய மாகாண பார்வைக் குறைபாடு கொண்டவர்களது பிரச்சினைகள் தொடர்பாக மகஜர்ஒன்றும் கையளிக்கப்பட்டது. இவை தொடர்பாக தகவல்களைப் பெற்று வெகு விரைவில் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு தர முயற்சிப்பதாகவும் ஆளுநர்அங்கு தெரிவித்தார். மேற்படி சந்திப்பில் மத்திய மாகாண பார்வைக்குறைபாடுடையோர் சங்க நிர்வாக அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.