Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மொட்டுக் கட்சி அலுவலகத்திற்கு திடீர் விஜயம்

,

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்றைய தினம் (14) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

காலை 10 மணியளவில் கட்சி அலுவலகத்திற்கு சென்ற அமெரிக்கத் தூதுவர், ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அங்கு இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு வருகை தருமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைவாக அவர் அங்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கத் தூதுவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமான்ன, C.B. ரத்நாயக்க, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

சந்திப்பு குறித்து நாமல் எம்.பி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பால் கடைப்பிடிக்கப்பட்ட தலையிடாத வெளியுறவுக் கொள்கைக் கொள்கையையும், வரி செலுத்துவோர் நிதியைப் பயன்படுத்துவதில் அதிக வெளிப்படைத்தன்மைக்கு அவர் விடுத்த அழைப்பையும் நாங்கள் பாராட்டுகிறோம்

மேலும், அமெரிக்க வரி செலுத்துவோர் வளங்களை ஒதுக்குவதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதில் கவனம் செலுத்தி, இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்படாத அரசு சாரா நிறுவனங்கள் USAID நிதியைப் பயன்படுத்துவதை விசாரிக்க ஒரு பாராளுமன்றத் தேர்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்மொழிவு குறித்து சுங்கிற்கு விளக்கினோம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.