Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

இனி காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு கிடையாது? சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு!

ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக ஊழியர்களை 30 ஆக பாகிஸ்தான் குறைக்கும்.

பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா ராஜாங்க ரீதியில் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் 1972 சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக தடாலடியாக அறிவித்துள்ளது. 

பாகிஸ்தான் ஊடகமான டான் வெளியிட்ட அறிக்கையின்படி, பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக் குழு, இந்தியாவின் நடவடிக்கைக்கு பதில் நடவடிக்கையை அறிவிப்பதற்காக கூடி இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விவாதித்துள்ளது. 

அப்போது, பஹல்காம்பயங்கரவாத தாக்குதலில் உயிர் இழப்புகளைக் கண்டிப்பதாக கூறி, அதேநேரம் இந்தியாவின் நடவடிக்கையை நிராகரித்தது. 

அதை "ஒருதலைப்பட்சமானது, அநீதியானது மற்றும் அரசியல் ரீதியாக உந்துதல் கொண்டது" என்று கூறியது. 

மேலும், இதனால் சிம்லா ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக அறிவித்துள்ளது.

சிம்லா ஒப்பந்தத்தின் முக்கிய அறிவிப்புகள்!

1971 போருக்குப் பிறகு கையெழுத்தான சிம்லா ஒப்பந்தம், இருதரப்பு உறவுகளின் ஒரு மையமாக இருந்தது. 

காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (எல்ஓசி) நிறுவியது மற்றும் இரு நாடுகளும் நேரடி உரையாடல் மூலம் சச்சரவுகளைத் தீர்க்க இந்த ஒப்பந்தம் உறுதியளித்தது. 

இந்நிலையில், தற்போது அந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்து, பதற்றத்தை அதிகரித்துள்ளது. 

மேலும், வாகா-அட்டாரி எல்லையை வர்த்தகத்திற்காக காலவரையின்றி மூடுவது, இந்திய நாட்டினருக்கான சார்க் விசா விலக்குகளை நிறுத்தி வைப்பது மற்றும் தனிநபர் அல்லாதவர்களாக அறிவிக்கப்பட்ட இந்திய இராணுவ அதிகாரிகளை வெளியேற்றுவது ஆகிய அறிவிப்புகளையும் பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது. 

கூடுதலாக, ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக ஊழியர்களை 30 ஆக பாகிஸ்தான் குறைக்கும்.