Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

ரணில் – பசில் சந்திப்பு: இனி நடைபெறுமா?

.

 

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பிலும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறுவுநர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் ஒவ்வொரு வாரமும் இடம்பெற்று வரும் சந்திப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதியின் சார்பில் மேலும் பல அரசியல்வாதிகள் கலந்துகொண்டமையே இந்தக் குழப்பத்துக்குக் காரணம்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதைப் பசில் விரும்பவில்லை. இந்தச் சந்திப்பில் பஸிலுக்கும் பிரசன்னவுக்கும் இடையில் வாய்த்தர்க்கமும் ஏற்பட்டது.

இதனால் அடுத்த சந்திப்பு இடம்பெறுமா என்பது சந்தேகமே. அப்படி இடம்பெற்றாலும், வழமைபோல் பசிலும் ரணிலும் மாத்திரமே கலந்துகொள்ள வேண்டும் என்று பஸில் தரப்பு தெரிவித்துள்ளது.