Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

முக்கிய தேர்தலுக்குத் தயாராகும் நிலையில் மீண்டும் சர்வதேச பிடிக்குள் இலங்கை: மனித உரிமைகள் தொடர்பில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை

.

ஜெனீவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ள மனித உரிமைகள் ஆணையாளர் வோல்க்கர் டர்க்கின் இலங்கை தொடர்பான அறிக்கை நேற்று வெளியானது.

இதேவேளை, இலங்கை புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு தயாராகி வரும் நிலையில் நாட்டில் அடிப்படை சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையின் செம்மையாக்கப்படாத வரைவே நேற்று வெளியானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை அரசாங்கத்தின் பதிலளிப்பின் அடிப்படையில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டதன் பின்னர் முதலாவது ஜனாதிபதித் தேர்தலை நடத்தவுள்ள இலங்கை, அதன் மனித உரிமைகள் பாதுகாப்பு முறையைச் சீர்திருத்துவதாக உறுதியளித்த போதிலும் அதனை இன்னும் செய்யாமல் இருக்கிறது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக, 2023ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் சட்ட மூலங்கள் பாதுகாப்புப் படைகளுக்குப் பல அதிகாரங்களை வழங்கியுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, கருத்துச் சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்படுத்தல் மீதான கட்டுப்பாடுகளை இலங்கை அரசு விரிவுபடுத்தியுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்கம் அதன் அதிகாரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவு மற்றும், ஊடகவியலாளர்களுக்கு ஏற்படுகின்ற அச்சுறுத்தல் என்பன தொடர்பாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, இலங்கை ஒரு முக்கிய தேர்தலுக்குத் தயாராகி வருகின்ற நிலையில், இவ்வாறானதொரு நிலை கவலையளிப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.