Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

புலிகளின் மூத்த உறுப்பினர் லிங்கம் அவர்களது 38 வது நினைவேந்தல் நாள். 29.04.1986.

1960 ஆம் ஆண்டு 12ஆம் மாதம் 16ஆம் திகதி வல்வெட்டித்துறையில் பிறந்த சிங்காரவேல் செல்வகுமார் என்ற புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான லிங்கம் அவர்களது 38 வது நினைவேந்தல் நாள் இன்றாகும்.

விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் லிங்கம்  அவர்களது 38 வது நினைவேந்தல் நாள் 29.04.1986.

 

1960 ஆம் ஆண்டு 12ஆம் மாதம் 16ஆம் திகதி வல்வெட்டித்துறையில் பிறந்த சிங்காரவேல் செல்வகுமார் என்ற  புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான லிங்கம்  அவர்களது 38 வது நினைவேந்தல் நாள் இன்றாகும்.

சிங்காரவேல் செல்வகுமார் தான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளராகி,  1980 ஆம் ஆண்டு தனது 20 தாவது வயதில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உதவியாளராக செயல்பட ஆரம்பித்தார். தன்னை முழு நேர உறுப்பினராக  1981 ஆம் ஆண்டு இணைத்துக் கொண்டு அதே ஆண்டில் இராணுவப் பயிற்சியையும் பெற்றுக் கொண்டார். தான் இணைந்து கொண்ட காலத்தில் விடுதலைப்புலிகளின் முதல் தளபதியான ஆசீர் என்ற லூக்காஸ் சாள்ஸ் அன்ரனியின் தலைமையிலும், சாள்ஸ் அன்ரனி காயமடைந்து இருந்த காலத்தில் அவர் பின்னர் தாக்குதல் தளபதியாக இருந்த சங்கர் சத்தியநாதன் தலைமையிலும், அத்தோடு 1983 ஆம் ஆண்டு யூலை மாதத்தில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட   வரலாற்றுப் புகழ் பெற்ற திருநெல்வேலி  தாக்குதலில் செல்லக்கிளி அம்மான் தலைமையிலும் செயல்பட்டார்.

அதன் பின்னர் தாக்குதல் தளபதியான சதாசிவம் கிருஷ்ணகுமார் என்ற கிட்டுவின்  தலைமையிலும், நடத்தப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் பல்வேறுபட்ட  தாக்குதல்களிலும் முக்கிய பங்கு வகித்தவராவர். அத்தோடு இந்திய ஆயுதப் படைகளால் உத்தர பிரதேசத்தில்  பொன்னம்மான்  தலைமையில்  நடைபெற்ற பயிற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து மூத்த போராளிகளான புலேந்தி அம்மான், விக்டர், கிட்டு, ராஜேஸ்,கணேஸ்,         அருணா, சுப்பண்ணா,யோகன் பாதர்,பொட்டு அம்மானுடன் லிங்கமும் ஒரு அணித்தலைவராக இருந்து பயிற்சியை முடித்துக் கொண்டு தமிழ் நாடு வந்து 1984ஆம் ஆண்டு  மதுரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின்  பொறுப்பாளராகக் கடமையாற்றிய அவர்  தமிழக மக்களுடனும் நல்லுறவை வளர்த்துக் கொண்டார்.  

ஆரம்ப காலங்களில் தேசியத்தலைவரின் உதவியாளராகவும், மெய்பாதுகாவலராகவும் விளங்கிய லிங்கம் அவர்கள் தேசியத் தலைவரால் நேசிக்கப்பட்ட ஒருவருமாவர் என்பதோடு  1985 ஆம் ஆண்டின் இறுதியில் தளம் திரும்பிய லிங்கம் அவர்கள், சக போராளிகள் ஒவ்வொருவருடனும் சகஜமாகப் பழகினார் என்பதோடு இயக்கம் இராணுவச்சீருடை அணியாத காலத்திலும் இராணுவச்சீருடைக்கு ஒத்த உடையணிந்து கம்பீரமாகவே காட்சியளிப்பார். கடமையில் கண்டிப்பானவரானாலும் அவர் எல்லோருடனும் பழகும் எளிமையான தன்மையினானல் அவர் மீது மற்றைய இளம் போராளிகள் அனைவரும் பேரன்பு கொண்டிருந்தனர். இப்படியான மரியாதைகுரிய மூத்த போரளி லிங்கம் அவர்கள்  29 ஆம் திகதி 04 ஆம் மாதம் 1986 ஆம் ஆண்டு  சங்கரத்தை சந்திக்கு அருகாமையில் உள்ள டெலோ முகாமின் வாயிலில்  டெலோ இயக்கதினரால்  கொல்லப்பட்டார்.

அவருக்கு எனது வீரவணக்கத்தை பதிவு செய்து, இந்த லிங்கத்தை டெலோ இயக்கம் கொன்றதன் காரணமாக அதி உக்கிரம் அடைந்த டெலோ மற்றும் புலிகளுக்கு இடையிலான மோதல், டெலோ இயக்க தலைவர். சிறீ சபாரத்தினத்திற்கு, 1986 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 6 ஆம் திகதி  தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட மரண தண்டனையை அடுத்து முடிவுக்கு வந்தது.