Breaking News
கிழக்கு மாகாண சுகாதாரத் துறையினருக்கு விழிப்புணர்வு செயலமர்வு..!
,

மாகாண சுகாதாரத் துறை மற்றும் பிராந்திய சுகாதார அதிகாரிகள் அலுவலகங்களின் பிரதானிகள் மற்றும் அதிகாரிகளுக்கான கொள்முதல் குறித்த விழிப்புணர்வு செயலமர்வு நேற்றையதினம்(3) திருகோணமலை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர இதனை நடாத்தி வைத்தார்.
இதன்போது, கிழக்கு மாகாண சுகாதார துறைக்கு பொருட்களை அல்லது சேவைகளை வாங்குதல் அல்லது பெறுதல் விடயங்கள் குறித்து இங்கு தெளிவுபடுத்தப்பட்டன.
இந்நிகழ்வில், ஆளுநரின் செலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி. திசாநாயக்க மற்றும் மாகாண சுகாதார பணியக மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர்கள் மற்றும் சக அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.