Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்பார்: அன்பரசன் திட்டவட்டம்

.

எதிர்வரும் 10 நாட்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் திட்டவட்டமாக கூறினார்.

காஞ்சிபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

நாளையோ அல்லது இன்னும் ஓரிரு நாட்களிலொ இந்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதி காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ளது.

தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் குறித்த முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது.

இதில் பவள விழா பொதுகூட்ட நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திடீரென நடத்தப்பட்ட இந்த கூட்டம் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாக தொடர்ந்து

வெளியாகி வரும் தகவல்களே இதற்கு காரணம்.

அண்மையில் சென்னையில் நடந்த தி.மு.க. பவள விழாவில் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்,

‘அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து தி.மு.க.வில் மீண்டும் இது பேசுபொருளானது.

பின்னர் சென்னை கோட்டூபுரத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி,

தனக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார்’ என்று கூறினார்.