Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

‘இத்தாலியில் இலங்கையர் ஒருவர் மீது கத்திக்குத்து'

41 வயதான வீடற்ற இலங்கையர் ஒருவர் கைது

‘இத்தாலியில் இலங்கையர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல்’: சட்டவிரோதமாக தங்கியிருந்த மற்றுமொரு இலங்கையர் கைது

இத்தாலியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 41 வயதுடைய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சக நாட்டவர் ஒருவரை பலமுறை கத்தியால் குத்தி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாக கூறப்படும் கொலை முயற்சிக்காக அவர் காராபினேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை (15) சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 44 வயதான இலங்கையர் பலத்த காயமடைந்துள்ளார்.

கழுத்து, மார்பு மற்றும் வலது தொடையின் அடிப்பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த நபர் பெல்லெக்ரினி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்த நிலையில், சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 41 வயதான வீடற்ற இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.