Breaking News
தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலை ஏற்படும்
.
ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் போது வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றால் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பின்போது வாக்களிப்பு நிலையத்தில் ஏதேனும் வன்முறை சம்பவங்கள் ஏற்படுமாக இருந்தால் அந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகள் சூனியமாக்கப்பட்டு, அந்தத் தொகுதிகளில் மீண்டும் வாக்கெடுப்பை நடத்தும் வரையில் நாடளாவிய ரீதியிலான இறுதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தேர்தல் நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.