Breaking News
முல்லைத்தீவில் குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர்ராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் ராமேஸ்வரம்,சேராங் கோட்டையை சென்றடைந்துள்ளனர்.
இலங்கை சேர்ந்த தமிழர்கள் ராமேஸ்வரத்தில் தஞ்சம்.
முல்லைத்தீவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் இன்று புதன்கிழமை (05) அதிகாலை ராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை (04) முல்லைத்தீவில் இருந்து மன்னாருக்கு சென்று மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் புறப்பட்டு இன்று புதன்கிழமை (05) அதிகாலை ராமேஸ்வரம் அடுத்த சேராங் கோட்டையை சென்றடைந்துள்ளனர்.
தாய், தந்தை மற்றும் நான்கு பிள்ளைகள் உள்ளடங்களாக 6 பேர் இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர்.
இலங்கை தமிழர்கள் ஆறு பேரையும் மீட்ட மரைன் பொலிஸார் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.