Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மட்டு சத்துருக்கொண்டான் பகுதியில் மண்டை ஓடு – எலும்புகள் மீட்பு!

கண்ணகி அம்மன் ஆலயத்தின் பின்பகுதியிலுள்ள உப்பாற்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டு சத்துருக்கொண்டான் பகுதியில் மண்டை ஓடு – எலும்புகள் மீட்பு!

மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயத்தின் பின்பகுதியிலுள்ள உப்பாற்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மண்டை ஓடு மற்றும் எலும்புகள் மீட்கப்பட்டுள்ளது.

சத்துருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயத்தின் பின்பகுதியிலுள்ள ஆற்றில் மதியம் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரின் வலையில் மண்டை ஓடு மற்றும் இரு எலும்புக் கூடுகள் சிக்கியதையடுத்து அதனை கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸ் தடவியல் பிரிவினர் விசாரணையில் 40 வயதுக்கு உட்பட்ட ஆண் ஒருவரின் மண்டை ஒடு என தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவானும் மட்டக்களப்பு நீதவானும், நீதிமன்ற பதில் நீதவானுமாகிய தர்சினி சம்பவ இடத்துக்கு சென்று மண்டை ஓட்டை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து மீட்கப்பட்ட மண்டை ஓடு எலும்புகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.