Breaking News
இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலை கட்டிடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் – 15 பேர் பலி!
.
காசவில் இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 15க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மத்திய காசாவின் நுசெய்ரட் அகதிமுகாமில் இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த கட்டிடத்தின் மீது இ;;;டம்பெற்ற தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.புழுதியும் இடிபாடுகளும் நிறைந்து காணப்படும் புகைமண்டலம் நிறைந்த வீதியில் பொதுமக்கள் அலறுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
மும்முரமான சந்தைக்கு அருகிலிருந்த கட்;டிடத்தின் மேல் தளம் இலக்குவைக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.