Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கிய சுன்னாகம் பொலிசார்!

.

யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு

யாழ். சுன்னாகத்தில் வாகனமொன்றின் மீது இருவர் மதுபோதையில் வந்து மோதிய சம்பவத்தை தொடர்ந்து சுன்னாகம் பொலிஸார் இரண்டு மாத குழந்தையின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் சிலரின் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டனர் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மாத குழந்தையை பற்றைக்குள் தூக்கியெறிந்த பொலிஸார் தாயையும் தந்தையும் கடுமையாக தாக்கினார்கள் என தாயார் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

நாங்கள் வீதியால் சென்று கொண்டிருக்கும்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் எங்கள் வாகனத்தை முந்தி செல்ல முயன்று தாங்களே அடிபட்டு கீழே விழுந்தார்கள்.

நானும் எனது கணவரும் அக்காவும் எங்களது வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றதால் நாங்கள் நின்றுவிட்டோம்.

கீழே விழுந்தவர் மது அருந்தியிருந்தார். கீழே விழுந்தவர் மது அருந்தியுள்ளதாகவும் நீங்கள் பயப்பட வேண்டாமென அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சிவில் உடையில் வந்தவர்கள் எனது கணவரிடம் வாகனச்சாரதி அனுமதிப்பத்திரத்தை கேட்டார்கள். ஆனால் அவர் போக்குவரத்து பிரிவினர் வந்தால் தான் கொடுக்க வேண்டும் என்பதால் கொடுக்கவில்லை.

எனது கணவரின் கையைப் பிடித்து இழுத்தார்கள் நான் விடவில்லை. எனக்கு கறுப்புநிற ரிசேர்ட் அணிந்த பொலிஸ்காரர் அடித்தார்.

இரண்டுமாத குழந்தையுடன் இருந்த எனக்கு அடித்தார்கள். நான் மயிலிட்டியில் இருக்கும் அண்ணாவுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டேன். அண்ணா சம்பவ இடத்திற்கு வந்தார்.

அவர் என்னவிடயம் என கேட்க அவருக்கும் அடித்துவிட்டு அக்காவுக்கும் அடித்தார்கள் எனது இரண்டுமாத குழந்தை வீதியில் விழுந்த நிலையில், எனது பிள்ளையை தூக்கி பற்றைக்குள் எறிந்தார்கள்.

இதனை நான் தட்டிக்கேட்க என்னை அடித்துவிட்டு வெள்ளை ரிசேர்ட் அணிந்தவர் எனது போனை தூக்கி எறிந்தார் பொதுமக்கள் தான் எனது தொலைபேசியை எடுத்துதந்தார்கள்.

எனது கணவர் பிள்ளையை வேனிற்குள் கொண்டு போக எனது பிள்ளையை கீழே போட்டுவிட்டு எனது கணவரிற்கு கையால் அடித்தார்கள்.

பிள்ளையை மருத்துவமனைக்கு கொண்டுபோக நாம் முயன்றபோது நீலநிற ரிசேர்ட் அணிந்தவர் வாகனத்தை இரும்பு கம்பியுடன் மறித்துக்கொண்டு நின்றார். வாகனத்தை எடுத்தால் உடைத்துவிடுவோம் என்றார்.

அண்ணா பிள்ளையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எங்கள் இரண்டு பேரையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அடித்ததுடன் கதிரையாலும் தாக்கினார்கள். எனக்கு புற்றுநோய் உள்ளது. எனது பிள்ளை பிறந்து இரண்டு மாதம். எங்களிற்கு நியாயம் பெற்றுதாருங்கள். எங்கள் வாகனத்தை மீட்டு தாருங்கள் என்றார்.