Breaking News
இலங்கை நோக்கி பயணித்த விமானத்தின் மீது வெடிகுண்டு மிரட்டல்!
.
மும்பையில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் (UK131) மீது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
108 பயணிகள் மற்றும் எட்டு பணியாளர்களுடன் பயணித்த குறித்த விமானம் உடனடியாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு விமானத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும், அங்கு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.