Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ரணிலின் வேலைத்திட்டங்களால் மனமாற்றமடையும் 15-20 ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

நான் வாழும் காலத்தில் இலங்கை முன்னைய சோமாலியா போல் ஆவதை காண விரும்பவில்லை.

ரணிலின் திட்டங்களை முன்னோக்கி கொண்டுசொல்ல வேண்டும்; விரைவில் அரசாங்கத்துடன் இணையும் ராஜித!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டங்களால் 15-20 வரையான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவரப்பட்டிருப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியைப் பெறுவதற்கு நான் தயாரில்லை. எனினும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு தேவையான ஆதரவை வழங்க தயாராக உள்ளேன்.

ஜனாதிபதி முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களை சீர்குலைக்கும் எண்ணம் தமக்கு இல்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நான் வாழும் காலத்தில் இலங்கை முன்னைய சோமாலியா போல் ஆவதை காண விரும்பவில்லை. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டால் அதனை ஏன் எதிர்க்க வேண்டும்?.

எதிர்க்கட்சியில் இருந்தாலும் மக்களுக்கான நல்ல திட்டங்களை நாம் ஆதரிக்க வேண்டும். ஜனாதிபதியின் செயல்பாடுகளை முன்னோக்கி கொண்டுசெல்ல அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என்றும் ராஜித சேனாரத்ன, தனியார் தொலைக்காட்சி விவாதமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைவில் ராஜித சேனாரட்ன விரைவில் அரசாங்கத்தில் இணைந்து சுகாதார அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

அவருடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பல உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவளிக்க உள்ளதாகவும் தெரியவருகிறது.